பக்கம்:பாலைச்செல்வி.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 ஆ புலவர் கா. கோவிந்தன் காலத்திற்கு முன்பே, இளவேனிற் பருவத் தொடக்கத்தே வருவேன் என்ற தன் சொல் பொய்யாகிப் போமாறு, அப் பருவம் வருவதற்கு முன்பே, பின்பனிக் காலத்தின் கடைநாட் காலத்திலேயே, வினை முடித்து வந்து சேர்ந்தார். நின் ஆசை அடங்க, அவர் வரும் வெற்றித் திருவுலாவை, வேண்டு மட்டும் கண்டு களி மகிழ் கொள்வாயாக!” எனக் கூறி அழைத்துச் சென்று காட்டிக் களிகூர்ந்தாள். "கடும்புனல் கால்பட்டுக் கலுழ்தேறிக் கவின்பெற; நெடுங்கயத்து அயல்அயல் அயிர்தோன்ற, அம்மணல் வடுத்துர வரிப்பபோல் ஈங்கைவாடு உதிர்புஉகப், பிரிந்தவர் நுதல் போலப் பிர்வியக், காதலர்ப் புணர்ந்தவர் முகம்போலப் பொய்கைபூப் புதிதுஈன, 5 மெய்கூர்ந்த பணியொடு மேல்நின்ற வாடையால், கையாறு கடைக்கூட்டக் கலக்குறுஉம் பொழுதுமன் பொய்யேம் என்று ஆயிழாய்! புணர்ந்தவர் உரைத்ததை, மயங்குஅமர் மாறுஅட்டு மண்வெளவி வருபவர் - தயங்கிய களிற்றின்மேல் தகைகான விடுவதோ, 10 பயங்கெழு பல்கதிர் பால்போலும் பொழுதொடு வயங்கிழை தண்ணென வந்தஇவ் அசைவாடை? தாள்வலம் படவென்று தகைநன்மா மேல்கொண்டு வாள்வென்று வருபவர் வனப்பு ஆர விடுவதோ, நீள்கழை நிவந்தபூ நிறம்வாடத் தூற்றுபு 15 தோள்அதிர்பு அகம்சேரத் துவற்றும்இச் சின்மழை? பகைவென்று திறைகொண்ட பாய்திண்தேர் மிசையவர் வகைகொண்ட செம்மல்நாம் வனப்புஆர விடுவதோ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/227&oldid=822239" இலிருந்து மீள்விக்கப்பட்டது