பக்கம்:பாலைச்செல்வி.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 * புலவர் கா. கோவிந்தன் மலர்களோடு, வேங்கையின் பொன்னிற மலர்களும் உதிர்ந்து கிடந்தன. ஆற்றில் வெள்ளம் வடிந்து போக, நீர் தெளிந்து ஓடிற்று. வெண்மதி, வானவெளியுள், தன்னை மறைக்கும் மேகம் இன்மையால், தூய தன் பேரொளி விசி விளங்கித்து. மா முதலாம் மரங்கள், மகவின்றவள் மேனியிற்றோன்றி அழகு தரும் திதலைகள் போலும் இனிய தளிர்களை, எண்ணெய்ப் பசை விளங்க ஈன்றன. ஆன்றோர்கள் அடக்கி வைத்துள தம் அறிவு ஆற்றல்களை உரிய காலத்தே வெளிப்படுப்பது போல், அதுகாறும் இலையோ, மலரோ பெறாதிருந்த மரக் கிளைகளெல்லாம் மலர் ஈன்று மணம் நாறின. தேன் உண்ணும் வண்டுகள், வல்லவர் இசைக்கும் யாழ் ஒலி போலும் இனிய ஓசை உண்டாகுமாறு, மலர்களால் நிறைந்து மறைப்புண்டு கிடக்கும் புதர்களை வளைய வளையப் பறந்து திரிந்தன. அரங்கேறி ஆடும் ஆடல் மகளிர் போல், மலர்க் கொடிகள், காண்பார் கண்ணிற்கு விருந்தளிக்குமாறு, காற்றில் மெல்ல ஆடி அசையத் தொடங்கின. ஈகையே இறவா நிலைதரும் என உணர்ந்து கொடுக்கும் உயர்ந்தோர் போல், மரங்கள் கொத்துக் கொத்தாக மலர் சன்று மாண்புற்றன. அன்பால் பிணைக்கப்பட்ட காதலர்கள் பிரிவின்றி வாழ்தல் போல், சில மலர்க் கொடிகள் ஒன்றோ டொன்று முறுக்குண்டு பின்னிக் கிடந்து பேரழகு தோற்றின. இளவேனிற் பருவத்தின் எழில்மிக்க இக்காட்சியைக் கண்டாள் அப் பெண். இக் காட்சியைக் கண்டு மகிழக் கணவன் உடனில்லையே என எண்ணித் துயர் உற்றது அவள் உள்ளம். அவள் அவ்வாறு துயர் உற்றுக் கிடக்குங்கால், ஆங்கு வந்தாள் அவள் தோழி. வந்த தோழி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/231&oldid=822244" இலிருந்து மீள்விக்கப்பட்டது