பக்கம்:பாலைச்செல்வி.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி இ. 235 அதோ கேள், அவற்றின் கொடிய குரலை. இவற்றை யெல்லாம் கண்டு, இவை செய்யும் கொடுமைகளை யெல்லாம் தாங்கி எவ்வாறு என் உயிர் வாழும்" எனப் பலப்பல கூறிப் புலம்பினாள். அவள் அவ்வாறு புலம்பி நிற்கும் அந்நிலையில், காற்றெனக் கடுகி ஒடவல்ல தன் நெடிய தேரை, விரைந் தோட்டி வந்து, அப் பெண்ணின் தலைவாயிற்கண்ணே நிறுத்தினான் அவள் கணவன். அத்தேரையும், அத்தேர்மீது அமர்ந்திருக்கும் அப் பெண்ணின் கணவனையும் முதற் கண் கண்ட தோழி, "பெண்னே! குயிலையும் அவரையும் குறை கூறி நிற்பதற்குக் காலம் இல்லை. இனி அதற்குத் தேவையும் இல்லை. வினை முடித்து வெற்றி மாலை விளங்க, அவர் அதோ வந்து விட்டார். வருத்தம் விடுத்து, வாரி முடித்த நம் கூந்தல் பின்னால் பிரிந்து போமாறு, விரைந்து ஓடி ஒடி, அவரை வரவேற்க வேண்டுவன புரிவோமாக. வருக!" எனக் கூறி அவளைப் பற்றி இழுத்துக் கொண்டு புறத்தே ஓடினாள். "வீறுசால் ஞாலத்து வியல்அணி கானிய யாறுகண் விழித்தபோல், கயம்நந்திக் கவின்பெற மணிபுரை வயங்கலுள் துப்புஎறிந் தவைபோலப், பிணிவிடும் முருக்கிதழ் அணிகயத்து உதிர்ந்துஉகத், துணிகயம் நிழல்நோக்கித் துதையுடன் வண்டார்ப்ப, 5 மணிபோல அரும்பூழ்த்து, மரமெல்லாம் அலர்வேயக், காதலர்ப் புணர்ந்தவர் கவவுக்கை நெகிழாது - தாது.அவிழ் வேனிலோ வந்தன்று; வாரார், நம் போதுஎழில் உண்கண் புலம்ப நீத்தவர்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/238&oldid=822251" இலிருந்து மீள்விக்கப்பட்டது