பக்கம்:பாலைச்செல்வி.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி இ 237 மலரும்:5. துணிகயம்-தெளிந்த குளம்:துதைபு- நெருங்கி, 6. வேய - சூட, 7. கவவுக்கை - பிரிவின்றிப் பற்றிப் பிணிப்புண்ட கைகள், 9. போது - பேரரும்பு ; 10. உறழ - ஒப்ப; 13. எள்ளி - நகைத்து; இகழ்ந்து 15. நொந்து அழகிற்குத் தோற்றமையால் வருந்தி, நந்தின - மலர்களால் நிறைந்தன; தைந்து - வருந்தி, 17. உகுவதுபோல் - அழுவதுபோல்; 20. இகுபு - வற்றி, 24 மிஞ்று - தேன் வண்டின் இனம்; 25. ஆலும் - கூவும்; அரோ - அசை, 27, புரிந்து - மனம் வேறுபட்டு; 28. நீல் - நீலமலர்; நெறிகூந்தல் - பின்னிய கூந்தல்; பிணிவிட - பின்னல் அவிழுமாறு; 31. கால்உறழ் - காற்றுப் போலும் விரைந்த செலவுடைய, கடவுதல் - விரைந்து ஒட்டுதல், கூந்தல் பிணிவிட துணைதந்தார் - கூந்தல் அவிழுமாறு வரவேற்பிற்காம் பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு செய்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/240&oldid=822254" இலிருந்து மீள்விக்கப்பட்டது