பக்கம்:பாலைச்செல்வி.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி இ. 23 கொண்டு, படர்ந்த மெல்லிய கொடி, தன்னைப் பற்றிப் படர மாட்டாது தரையில் வீழ்ந்து வாடுவதைக் காட்டி, இதைப் போன்றே, நின்னையல்லாது வேறு பற்றுக் கோடறியா நின் மனைவி, நீ பிரியின் இக் கொடியைப் போன்றே, பற்றுக்கோடற்று வாடித் துயர் உறுவள்! என்ற உணர்வினை நின் உள்ளத்தில் ஊட்டும். அவ்வுணர்வு வரப்பெற்ற உனக்கு, அவ்விடத்தைக் கடந்து மேலே செல்ல வல்ல உரம் உண்டாகாது. ஒருகால், அதையும் பொருட்படுத்தாது மேலே செல்லத் தொடங்கின், அம்மரம், தான் வற்றியதால், தன் கிளைகளில் அழகு பெறத் தளிர்த்திருந்த இளந்தளிர்கள் வாடி வதங்கிப்போன காட்சிகளைக் காட்டி, மனைவியின் உயிராய், அவள் மனை வாழ்க்கையின் முழுமுதலாய் விளங்கிய நீ பிரியின், அவள் மரம் வாட வாடும் தளிரேபோல் வாடுவள்” என்பதை நினைப்பூட்டி, நின்னைப் போகாது தடுக்கும். அதையும் கண்டு இவள் நிலையை எண்ணிப் பாராது வினைமேற்கொண்டு செல்வது நினக்கு இசையாது. எடுத்த வினையை இடைவழியில் கைவிட்டு மீண்டுவருதல் உறுதி. "அன்ப ! ஒரு வினையைத் தொடங்கியவர், இடையே கைவிடுதல் கூடாது. அவ்வாறு இடையே கைவிடுவதினும், அதைத் தொடங்காதிருத்தலே நன்றாம். கேளாது சென்று, சென்ற வினையையும் முடிக்காது வருதலைவிடச் செல்லாமையே நன்று. தன் நலத்தில் நாட்டம் உடைய தன் போலும் மக்கள் கூறிய அறிவுரை கேட்க மறுத்துச் சென்றவன், இடைவழியில் மரமும், செடியும் கூறியன கேட்டு மனம் திருந்தினான் என்ற பழியாவது எஞ்சும்!” என்று கூறினாள். தோழி கூறிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/25&oldid=822264" இலிருந்து மீள்விக்கப்பட்டது