பக்கம்:பாலைச்செல்வி.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி இ 41 பேய்க்காற்றுத் தோன்றி மோதுங்கால், யாமும் அப்பேய்க் காற்றால் அலைப்புண்டு, இறுதியில் உடைந்து கவிழப் போகும், அத்தோணியில் செயலற்றுக் கிடந்து, அத் தோணியோடு உடன் அழிவதல்லது வேறு எதையும் செய்யக்கடவேமல்லேம். இதையும் நீ உணர்தல் வேண்டும். "மேலும், நீ கடந்து செல்ல வேண்டிய அப்பாலை வழி, ஏதம் ஏதும் இன்றி, விரைந்து சென்று மீளலாம் வழிநலம் வாய்ந்ததன்று. பனைபோல் பருத்த கால்களை யுடைய வாய யானைக் கூட்டமும், பிற காட்டு விலங்குகளும், அக்காட்டு விலங்குகளினும் கொடியராய், அக்காட்டுவழி வருவாரை அலைத்து உயிர் வாழும் மறவர்களும் திரிந்து திரிந்து, அப்பாலை நிலத்துப் புதர்களெல்லாம், இடையிடையே அழிந்து போக, ஆங்குப் பலப் பல வழிகள் தோன்றிக், கடந்து செல்ல வேண்டிய கருதிய இடத்திற்கு இட்டுச் செல்லும் நல்ல வழி எது என்பதை அறிய மாட்டாது மயங்க வைக்கும் கொடுமையுடையது அந்நிலம்; ஆண்டுச் செல்லும் நீ, காதல், கடமைகளில் சிறந்தது எது, இன்பம் தரும் இளமை, புகழ் தரும் பொருள் இவற்றுள் சிறந்தது எது என்பதை அறியமாட்டாது ஈண்டு மயங்கிய நீ, ஆண்டும் நல்லவழி எது என்பதை அறிய மாட்டாது மயங்கிக், காற்று ஈர்த்துச் செல்லும் திசைகளிலெல்லாம் ஓடி உழன்று அழியும் கலம் போல், அக்காட்டில் காணும் வழியிலெல்லாம் திரிந்து திரிந்து கலங்குவதும் உண்டாம். இதையும் நீ உணர்தல் வேண்டும். "அவ்வாறன்றிப் பொருளினும் இளமையே சிறந்தது; கடமையினும் காதலே சிறந்தது; ஆகவே, அக்காதற் பயன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/43&oldid=822295" இலிருந்து மீள்விக்கப்பட்டது