பக்கம்:பாலைச்செல்வி.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி ళ 47 வருந்த, கோடையின் கொடுமையாலும், அக்கொடி யோரின் கொடுஞ்செயலாலும் மயங்கி வீழ்ந்து நீர் வேட்கையுற்று, அவ்வேட்கை தணிக்கும் தண்ணிர் ஆங்கு யாண்டும் கிடைக்கப் பெறாமையால், துயர் தாளாது துளிர்த்து வீழும் தம் கண்ணிர்த்துளிகளையே தம் நாவால் சுவைத்துத் தம் நாவறட்சியை ஒருவாறு அடக்கி உறுதுயர் கொள்ளும் கொடுமையுடையது அக்கானற் பெருவழி, அக்கொடிய வழியைக் கடந்து செல்வது, தன்னைப் போலும் ஆடவர்க்கே இயலாது என்றால், இவள் போலும் மகளிரால் இயலுமா? மனையகத்தே, மனம் விரும்பும் தோழியர் உடன் இருந்து பணிபுரிய, மகிழ்ந்திருக்க வேண்டிய மெல்லியலாளாய இவள், ஆங்கு வந்து அத்துன்பத்தைத் தாங்குவாளல்லள்; அவள் ஒருவாறு அதைத் தாங்கிக் கொள்ளினும், அக்காட்சியை, ஆங்குத் தண்ணிர் பெறமாட்டாது தளரும் கொடுமையைக் கண்டு வினைமேற் செல்வது தன்னால் இயலாது. அதனால், காட்டின் கொடுமையினையும், காலத்தின் கொடுமை யினையும் அவளுக்கு எடுத்துக் கூறினான். அக்கொடுமையை எடுத்துக்காட்டி, ஆகவே, ஆங்கு உன்னை அழைத்துச் செல்வது தகாது!’ எனக் கூற எண்ணினான் அவன். ஆனால், அதை அவன் கூறுதற்கு முன்னரே, காட்டின் கொடுமைகளைக் கூறி வரும்போதே, அவன் கருத்து அதுவாதல் அறிந்து கொண்டாள் அப்பெண். அதனால், அவனை மேலே பேசவிடாது வாயடைத்துவிட்டு, "அன்ப! நின்னோடு வரின், ஆங்கு அக்கொடுமை தாளாது யானும் வருந்துவன், நின்னையும் வருத்துவன் என்று கருதுகின்ற நீ, என்னோடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/49&oldid=822301" இலிருந்து மீள்விக்கப்பட்டது