பக்கம்:பாலைச்செல்வி.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 புலவர் கா. கோவிந்தன் நீங்காது, தான் அவனை அடைவதன் முன், அவன் பெற்றிருந்த பழஞ் செல்வத்தையும் பெருமையையும் உடன்ழித்துச் செல்லும், அம்மட்டோ செல்வம் ஒருவனை அடையுங்கால், ஆகூழ் அவனை அடைந்த பின்னரே மெல்ல வந்து அடையும். ஆனால், அவனை விட்டு நீங்கும் காலத்தோ எனின், அவ்வாகழ் அவனை விட்டு நீங்குவதற்கு முன்னரே, விரைந்து நீங்கிவிடும். இவ்வாறு, ஆகூழ் அடைந்த பின்னர் அடைந்து, அது நீங்குவதன் முன்னரே, அவனை விட்டு நீங்கும் செல்வம், அவன்பால் பழிநிற்க, பண்டு அவன் பெற்றிருந்த செல்வத்தையும் அழித்துச் செல்லும் இயல்புடைமையால், அது அவன் ஆகூழினும் இழிவுடையதாம். - " பொருளாலும் நிலையாலும் ஆம் தம் உயர்வைச் சிறிதும் கருதாது, யாண்டும் என் நல்வாழ்வையே நினைந்து உழைத்த அமைச்சர் இவர்! என அவ்வமைச்சர் தம் பெருமையைப் பாராட்டாது, அவர் தனக்குச் செய்த நன்மைகளை நினைந்து அவர்பால் அருள் புரிவதும் செய்யாது, அவ்வமைச்சர்களையும் கொன்று குவிக்கும் கொடுங்கோலன் ஆட்சி, நாட்டில் நெடிது நாள் நிற்பதில்லை. அவ்வரசு அழிவது உறுதி. அந்நாட்டு மக்கள், அவ்வரசை அழித்து, விரைவில் வேறு அரசு அமைத்து விடுவர். அத்தகைய கொடுங்கோல் அரசின் அழிவும் சின்னாள் கழித்தே நிகழும். ஆனால் செல்வ அழிவு அப்பொழுதே நிகழ்ந்துவிடும். அவ்வரசை அழிக்க, மக்கள் திட்டமிட்டுக் காரியமியற்றும் வரையாவது, அவ்வரசு வாழும். ஆனால், செல்வ அழிவு மிக மிக விரைந்ததாம். வெள்ளம், வெந்தணல், கள்வர், காவலன் என அச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/64&oldid=822318" இலிருந்து மீள்விக்கப்பட்டது