பக்கம்:பாலைச்செல்வி.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 இறந்த கற்பினாள் உலகில் தோன்றிய ஒவ்வொரு பொருளும், யாதேனும் ஒரு வகையில் பிறர்க்குப் பயன் தருவனவாதல் வேண்டும். பொருள்கள் தோன்றுவது பிறர்க்குப் பயன் தருதற்கேயாம். பொருள்கள் அவ்வாறு பயனளித்த வழி, தோன்றிய பயனை அது அடைவதோடு, தன்னைத் தோற்றியவர்க்கும், தான் தோன்றக் காரணமாய் இருந் தார்க்கும், தான் தோன்றிய இடத்திற்கும் பெருமை யுண்டாம். அதற்கு மாறாகத் தோன்றிய பயனை அது தாராதாயின், அப்பொருள் தோன்றியதினும் தோன்றா திருத்தலே நன்றாம். பிறர்க்குப் பயன்படா ஒரு பொருளைத் தோற்றுவிப்பதினும், தோற்றுவியாதிருத்தலே நன்றாம் என அப் பொருளும், அப் பொருளைத் தோற்றுவித்தவரும் பழிக்கப் பெறுவர். பொருளின் தோற்றமும் பயனும் என்ற இது போலும் உண்மைகளை உணர்ந்த பெரியார்கள், பழந்தமிழ் நாட்டில் பலர் இருந்தனர். இவ்வுண்மையை உணரமாட்டாமையால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/69&oldid=822323" இலிருந்து மீள்விக்கப்பட்டது