பக்கம்:பாலைச்செல்வி.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 இ. புலவர் கா. கோவிந்தன் மனையில் பிறந்தவள் என்பது உண்மை. ஆனால், அவள் எப்போதும் நும் மனையிலேயே இருக்க உரியாள் அல்லள். வளர்ந்து, மணப் பருவம் வாய்க்கும்வரையே அவள் ஆங்கு வாழ உரியள். அப்பருவம் வந்துற்றதும், அவள் தான் பிறந்த இடத்தை மறப்பள்; பெற்ற தாய் தந்தையரை மறப்பள்; உடனிருந்து அவர்க்கு உதவ வேண்டும் என்பதையும் எண்ணிப் பாராள்; தான் காதலிக்கும், தன் அன்பிற்கு ஏங்கி நிற்கும், தன்னை மனைவியாகப் பெற மனம் துடித்து நிற்கும் இளையானைத் தேடிச் செல்வள். சென்று அவனை மணந்து, அவனோடு மனையறம் மேற்கொண்டு மாண்புறுவள். அந்நிலையில், அவள் பண்பு கண்டு பாராட்டும் உலகம், அவளைப் பெற்றுத் தந்த பெருமைசால் நும்மையும் பாராட்டும். தக்கான் ஒருவன், தன் காதலைக் காட்டிக் கைக்கொண்டு சென்று கடிமணம் புரிந்து கொள்ளானாயின், அவள் பிறந்த தும் மனையி லேயே கிடந்து, மகளிர்க்குரிய மாண்புகளை இழந்து மாண்டு போவாள்; அதனால், அவள் பிறந்த தும் குடிக்கும் பெருமை குன்றும். அவளைப் பெற மாட்டாது, அவள் காதலனும் அழிவன். ஆகவே, தாயே! தம்மிடத்தில் தோன்றிய சந்தனமும், முத்தும், இசையும் தம்மிடத்தி லேயே இருக்க வேண்டும் என எண்ணாத மலை, கடல், யாழ்களைப் போல், தாங்களும், தும் மனையிற் பிறந்த நும் மகள், நும்மை என்றும் பிரியாது, தும்மோடேயே இருத்தல் வேண்டும் என எண்ணுதல் கூடாது; அது அறமும் ஆகாது. . "மேலும் நும் மகள் கைப்பிடித்த அவ்விளைஞன் அறிவால், ஆண்மையால், அறநெறி ஒழுகும் ஒழுக்கத்தால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/76&oldid=822331" இலிருந்து மீள்விக்கப்பட்டது