பக்கம்:பாலைச்செல்வி.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 இன நலம் உடைய கானம் அருளும், ஆண்மையும், அன்பும், அறநெறி ஒழுக்கமும் உடையான் ஓர் அரசிளங் குமரன், தன் மனத்திற் கிசைந்தாள் ஒருத்தியை மணந்து, மகிழ்ந்து வாழ்ந்திருந்தான். ஒரு நாள், அவன், தன் அன்புடைய மனைவியை அழைத்து, "ஆருயிரனையாய்! நம் வாழ்க்கை உலகோர் போற்றும் உயர்வுடைய வாழ்க்கையாய், உலகத்தவர்க்கு உயர்நெறி காட்டும் வான் புகழ் உடையதாய் விளங்க வேண்டும். வாய்த்தற்கு அரிதாய அறவுள்ளம் வாய்க்கப் பெற்று, நம் மீது அருள் கொண்டு, நம் மனை நோக்கி வருவார் அனைவர்க்கும் வாரி வாரி வழங்குதல் வேண்டும். நம்மினும் படைபலம் பெற்று நம்மை அழிக்க அமயம் நோக்கி நிற்கும் பேரரசுகளை வென்றும், நம்மைப் பணியாது பகைத்து நிற்கும் சிற்றரசுகளை அழித்தும், நல்லரசு அமைந்து நாடாள வேண்டும். மனம் ஒன்று பட்டு, நாம் இருவரும் மேற்கொண்ட நம் காதல் வாழ்வு, இறவா இன்பம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/87&oldid=822343" இலிருந்து மீள்விக்கப்பட்டது