பக்கம்:பாலைப்புறா.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300 பாலைப்புறா

கவனியுங்க... நிச்சயமாய் அந்தப் பெரிசு...அந்தப் பையனோட அப்பாவா இருக்கமாட்டான்; அந்த அப்பாவிப் பையனை பெண்டாள வந்த சண்டாளனாய் இருப்பான்... மொதல்ல... நான் சொன்னதைப் போய் பாருங்க. நமஸ்காரம். போயிட்டு வாங்க”

வந்தவர்கள், யோசித்தார்கள்; ஒரினச் சேர்க்கையை தடுப்பதல்ல அவர்கள் நோக்கம். அப்படி சேர்கிறவர்களின் கையில், பட்டு போன்ற கான்டோமை திணிப்பதே அவர்கள் பணி. ஆகையால், என்ன செய்யலாம் என்று அந்த சராசரி ஆணும், சராசரிப்பெண்ணும் காதைக் கடித்தார்கள். அந்தப் பெண், அவர்கள்சொல்வதில் உள்ள யதார்த்தத்தைப் புரிந்ததுபோல், மேலும் கீழுமாக தலையாட்டியபோது, அவர், இன்னொரு யதார்த்தத்தை எடுத்துக் காட்டி பக்கவாட்டில் தலையாட்டினார். ஆக மொத்தத்தில், காண்டோம் விநியோக எண்ணிக்கையைக் கூட்ட முடியவில்லையே என்ற ஆதங்கம்... அதோடு போய் விட்டார்கள்.

அவர்கள் போனதும், மனோகர் உதடுகளால் சப்புக் கொட்டினான். ஆயிரம் இருந்தாலும், அவளை அப்படி இன்ஸல்ட் செய்திருக்கக் கூடாதுதான். அவனிடம் அந்த நிரோத்தை நீட்டிய போது, அதை வெந்த புண்ணில் பாய்ந்த வேலாக எடுத்துக் கொண்டதில்தப்பில்லைதான்; அதற்காக அவள் மீதே காறி உமிழ்வது போல், அந்த நிரோத்தை, தலைய்ைச் சுற்றி, தூக்கிப் போட்டிருக்கக்கூடாதுதான்.

மனோகர், தன் குற்ற உணர்வை மறப்பதற்காக, ஒரு பாட்டைப் பாடினான். பக்கத்தில் கிடந்தவனின்முதுகை மேளமாக்கினான். திடீரென்று, அவன்வாய் அடைபட்டது. கண்கள், சடன் பிரேக் போட்ட சக்கரங்கள் மாதிரி உருண்டு நின்றன. அவனுக்கு எதிரே, அன்புமணி நிற்கிறான். இரு பக்கமும் விகாரமான பார்வை கொண்டவன் ஒருத்தன்... கருடமூக்குள்ள காக்கிச் சட்டைக்காரன் இன்னொருத்தன்.

அன்புமணி, விறைப்பாய் பேசினான்.

‘இவன்தான் ஸார் மனோகர். இவன்கிட்டேதான் ஸார் கடையில திருடுன. செயினைக் கொடுத்தேன்... நான் சொன்னது மாதிரி. ரெண்டு பேருமா சேர்ந்துதான் ஸார் திருடுனோம். என்னைமட்டும். உதச்சால் என்ன சார் நியாயம்.. ?”

அன்புமணியின் வலதுபக்கத்தில் நின்ற கருட மூக்குக்காரனைப் பார்த்து, மனோகர் ஒரு வணக்கம் போட்டான். சந்தேகமில்லை. அப்போ... போலீஸ் நிலையத்தில், தனக்கு செமத்தையா கொடுத்தானே, அதே போலீஸ்தான்... இந்த அன்புமணி என்னத்தைக் கொடுத்தான்... நான் என்னத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/300&oldid=635753" இலிருந்து மீள்விக்கப்பட்டது