பக்கம்:பாளையங்கோட்டை.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்று பரபரப்பான துணை நகரமாகத் திகழும் பாளையங்கோட்டை நகரம், 'ஸ்ரீ வல்லப மங்கலம்' என்ற ஓர் எளிய கிராமமாக உருவாகிப் பின்வந்த காலங்களில் கோட்டை கொத்தளங்களுடன் வளர்ச்சிபெற்று, தமிழகத்தின் தென் பகுதியைக் கைப்பற்ற நிகழ்ந்த படையெடுப்புகளில் இடம்பிடித்த வரலாற்றைச் சொல்லும் அறிமுக நூல் இது. பண்டைய காலம், இடைக் காலம், ஆங்கிலேயர் காலம் என்ற மூன்று காலகட்டங்களிலும் இடரீதியாகவும் சமூக கலாச்சார ரீதியாகவும் பெற்ற மாற்றங்களைக் கிடைத்துள்ள தரவுகளின் அடிப்படையில், அறியத்தருகிறது. வருங்கால ஆய்வாளர்களுக்கு இந்நகரம் பற்றிய ஆய்வுக்கான தொடக்கப்புள்ளியாக இச்சிறுநூலைக் கொள்ளலாம். ரூ.80 காலச்சுவடு பதிப்பகம் ISBN 978-93-88631-25-9 00001 9789388 631259 ஆய்வு நூல் அட்டை ஓவியம் அ. செல்வம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாளையங்கோட்டை.pdf/72&oldid=1669015" இலிருந்து மீள்விக்கப்பட்டது