பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 1.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 73 தமிழே எனக்கு இறைவன்! தமிழே எனக்கிங் குயிர்மலர்ச்சி - செந் தமிழே எனக்கிங் குடலம்! தமிழே எனக்கிங் குள்ளுணர்வு - பைந் தமிழே எனக்கிங் குலகம்! தமிழே எனக்குக் கருத்தெழுச்சி! - தீந் தமிழே எனக்குப் பார்வை! தமிழே எனக்குச் செவியோசை! - நற் றமிழே எனக்குப் பிறவி! தமிழே எனக்கு முழுமுதல் தாய்! - முத் தமிழே எனக்குத் தந்தை! தமிழே எனக்குக் குரு, கல்வி! - நந் தமிழே எனக்குக் காட்சி! தமிழே எனக்கிங் குயிர்த்துணைவி! - இன் தமிழே எனக்குக் குடும்பம்! தமிழே எனக்கிங் குயிரின்பம்! - வண் தமிழே எனக்குக் குழவி! தமிழே எனக்கிங் குறவுரிமை ! - வன் தமிழே எனக்குச் சுற்றம்! தமிழே எனக்கிங் குயர்வாழ்க்கை! - அந் தமிழே எனக்குத் தொண்டு! தமிழே எனக்கோர் எழுத்துறவு! - இயற் றமிழே எனக்குப் பேச்சு! தமிழே எனக்கோர் அறிவியக்கம்! - இசைத் தமிழே எனக்குயிர் மூச்சு! தமிழே எனக்கிங் குயிர்நட்பு! - நடத் தமிழே எனக்கு விருந்து! தமிழே எனக்கு வினையாடல் - உயிர்த் தமிழே எனக்கு நனவு! தமிழே எனக்குத் திருமறைநூல் - பழந் தமிழே எனக்குக் கனவு! தமிழே எனக்கு மத மெய்மம்! - அருந் தமிழே எனக்கிங் கிறைவன்! - 1978