பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 1.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 82 தமிழைக் கொல்லும் மூடர்களே! கலப்புத் தமிழும் தமிழாமோ? - இழி கயமைச் செயலும் செயலாமோ? - அலப்புச் சொல்லும் இசையாமோ? - வீண் ஆரவாரமும் வாழ்வாமோ? கொச்சைத் தமிழும் தமிழாமோ? - கடுங் கொடுமை உரையும் உரையாமோ? பச்சைச் சொல்லில் பாலுணர்வைத் - தாள் பதிக்கும் இதழும் இதழாமோ? போலித் தமிழும் தமிழாமோ? - வெறும் புன்மைப் பேச்சும் பேச்சாமோ? கூலிப் பிழைப்பும் பிழைப்பாமோ? - ஒரு கொள்கைச் சிதைவும் சிறப்பாமோ? கீழ்மைப் பேச்சும் தமிழாமோ? - சிறு கிறுக்குத் தனமும் அறிவாமோ? தாழ்மைச் செயலால் பிழையுரையால் - செந் தமிழைக் கொல்லும் மூடர்களே! - 1980