பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 1.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ffião கரு. for . 座印。 இ.அ. ங்க.. తిరి, கணிச்சாறு முதல் தொகுதி சோர்வுற்ற பொழுதிலேயோர் செந்தமிழ்ப் பாடல் உண்டால் ஆர்வற்ற உள்ளத் திற்கோ ராயிர மின்பம்; வந்து நேர்வுற்ற துயரால் உள்ளம் நைந்திடும் போழ்தில் காதிற் சேர்வுற்ற தமிழ்ச்சொல் லம்மா சேர்ப்பது கோடி யின்பம்! ஞமலியொன் றிரவிற் றோயுங் திங்களைக் குரைப்ப தொப்பத் தமநலம் மறந்தே இன்பத் தமிழினைப் பழிப்பார்க் கெல்லாம் எமதுநா விளக்கஞ் சொல்லு மேற்றத்தை விளைக்கு மானா லுமதுநா கலிநோய்க் காற்றா துட்புகும் பவள வாயே! ஞாலத்து முதலே! மக்கள் நன்னிலை வாழ்வுத் தாயே! கோலத்து வரியே! உன்னைக் கொடுமொழி சொல்வார் (கொண்ட தாலத்துப் போகச் செய்யும் தனிமகன் வறுமை யேற்றுச் சேலத்துள் வாழ்வான் கண்டு செம்மைசேர் சீலத் தாயே! Dமிறுநான் மலர்நீ ஊரும் எறும்புநான் கன்னல் நீயே தமிழ்நெஞ்சக் கிழிஞல் நான்நீ தனிமுத்தா யதனுள் வாழ்வாய் கமழ்நறு மாரம்நீ என் கவிமண் மாரக் கல்லே! அமிழ்தெழு பரவைநீ நான் அதிலுறு மீனந் தாயே! ஞெமுக்கிடு மிடுக்கண்பட்ட ஏழையன் வறுமை யென்னும் இமிழ்க்கிடு மாழி நீந்த வின்றமிழ்ப் படகை யாடா தமுக்குவை; கரையே றிப்போய் ஆக்குந வாற்றிமீட்டே உமக்கொளி மண்டு நீண்ட உயர்புகழ் சேர்ப்பன் காணாய்! ஞொள்கினைப் பெயரின்று! ஞாயிறு போந்து திங்கள் நள்ளிர வோட்ட வாடும் வகையெனப் பண்டு சூழ்ந்த தெள்புகழ் அஃகி ஈண்டுத் தண்ணொளி வந்த தெல்லாம் வள்ளண்மை யில்லா வுன்றன் வகையென எண்ணிக் (காப்பாய்! தனித்தகை மொழியே! இந்தத் தரையில்வாழ் மக்கட் கெல்லாம் இனித்தநற் பொருளே! சொல்லின் எளிமைசேர் அழகே! இன்பக் கணித்தமிழ் மொழிகூ ரன்னாய்! கடிதமிழ் கற்குங் கால்முன் னினித்துப்பின் தீமை சேர்க்கும் முரண்பாடு கொண்டோய் (வாழி!