பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 1.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவலரேறு பெருஞ்சித்திரனார் சரு. தாவில்மன் புகழைச் சேர்ப்பேன்; தனித்தமிழ் தமிழ்என் - [றார்ப்பேன் பாவில்நன் கருத்தைச் சொல்லிப் பாரினுக் குதவி யன்பு து.ாவிய நிலையில் வாழக் குறிக்கொண்டு வாழுங் காலை மேவிலா தென்றன் போக்கில் மிடிசேர்த்தாய் தாயே வாழி! திரும்பிய திசைகள் தோறுந் தீந்தமிழ் பேசல் வேண்டும் விரும்பிய கருத்தைக் கூறச் செந்தமிழ்ச் சொல்லே வேண்டும் கரும்புதீஞ் சுவையே! வாழ்வின் கதிரொளி: இன்பம் (யாண்டும் அரும்பிய வாழ்வு வேண்டு மனத்தினை வாழ வைப்பாய்! . தீஞ்சுளைக் கணியின் சாறே! தென்றலே! தென்ற லூரும் பூஞ்சுனைப் புனலிற் றோயும் புதுமண மலரே உந்தும் ஊஞ்சலின் அசைவால் உள்ளம் உணர்ந்திடு மின்ப மேவான் றோய்ந்துi ழருவியெல்லாந் தோகையுன் தோற்ற மன்றோ? துருவுங்கா லென்னின் மிக்க துன்பத்தைக் கொண்டாய்! - (கொண்ட அரும்பெறு நூற்செல் வத்தை ஆழிக்குப் பறிகொ டுத்தே பெருந்துன்பம் மேவுநீண்ட பிணிவாழ்க்கை யுடையாய் (என்பால் வருந்துன்பம் போக்க நீயும் வல்லையோ? மிடிகொண் - (டாளே! தூறலெந் துன்ப மென்னின் தொலையாப் பேய் மழையுன் - - - (துன்பம். பீறலெந் துன்பெனில், நாண் பேணவுங் கூறை யில்லாய்! ஏறலெந் துன்ப மென்னின் ஏறிய துன்பங் கொண்டாய் ஆறலெந் துன்ப மென்னின் ஆற்றாத துயர்கொண் டாயே! தொங்குநீர்க் கோடைக் காகுந் திரண்டுள நூற்க ೧೧TEುಖT மிங்குளோர் வெம்மை போக்கு மின்னிழ லாகும் நாறுஞ் சங்குசாய் ஆழி யுண்ட நூற்கோடி யென்றால் வந்தே தங்கினார் மேய்ந்த நூற்கள் கணக்கிலை; தமிழின் தாயே! தேடிய நூற்செல் வத்தைத் திரட்டியே அணிகள் செய்து நீடிய வின்பந் துய்த்துப் போந்தனர் சான்றோர்; ஈண்டு