பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 1.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 36 செந்தமிழ்ப் பாவை! தாய்மைக் குலத்தீர்! தமிழ்மொழிக்கே யாம்பாடும் வாய்மைத் தமிழ்ப்பாவை வந்திங்குக் கேண்மினோ! தூய்மையுறும் நெஞ்சம்! சுடர்மணிப்பூண் தோள்கலிக்கும் பேய்மை யகலும்! பிறவிநலம் வந்தெய்தும்! மாயப் புரைசால் மலிவினைகள் மாண்டொழியும் சேயவிழ்வாய் நாறச் சிமிழ்மார்பு அமிழ்தூட்டி ஏய அவர்செவியில் எந்தமிழ்ப்பால் ஊட்டுதற்கே ஆய பொழுதும் அலர்ந்தேலோ ரெம்பாவாய்! f மன்னும் பிறவி மடுக்குந் திருக்குலத்தீர்! முன்னம் பிறப்பறியோம்! முந்துகடல் வாங்கியுண்ட பன்னுரல் சிறப்பறியோம்! பாவையார்! பாழ்பட்ட இன்னுால் கணக்கிங் கெடுத்தறியோம்; எந்தமிழ்க்கே தொன்னூல் இவையென்று தோற்றுவன யாம்கண்டோம்; நன்னர் முடிவெடுத்தோம்; நானாமே, நாணாமே, என்னெமக்கே வந்துற்ற தென்றே இமைதிறவாது இன்னும் துயில்வீர்! எழுகேலோ ரெம்பாவாய்! 2 போதார் திருவைப் புரைவில்லாச் செந்தமிழைத் தீதார் பிழைநாவின் வல்படையோர் சீரழிக்கப் போதரு கின்றார்; புறப்பட்டார்; பொன்னொளிர்கல் காதார் பிறைநுதலீர்; கண்பாடுங் கொண்டீர்காண்! ஈதார் கடனோவென் றெண்ணாதீர்! ஈண்டெழுந்த பேதைப் பெருங்கூட்டம் பின்னிட் டடங்கிடவே ஊதுமினோ வெண்சங்கம்! வெற்றிப்பால் ஊட்டுமினோ! மாதர் குலமே, மலையேலோ ரெம்பாவாய்! 3 காமம் மதர்க்கும் கருவிழிமேல் வில்லிமைக்கே யாமத் திருளைக் குழைத்திட்டு, நீள்குழற்கே பூமுன்னாள் மாலை முடித்தாய்; புலர்பொழுதில் ஊமைச் செவிடா உறங்குதியே! ஒண்டமிழ்க்குத் தீமை புரிவார் திறங்கலங்க, பூண்பொடிய மாமைப்பொற் றேமல் மலியும் மணிவயிற்றில் ஏமம் புரிய இளையோரைப் பெற்றெடுக்குந் தாமரைப் பூங்கண் திறவேலோ ரெம்பாவாய்! 4