பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 1.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 60 இதற்கென்ன சொல்லுகின்றீர்? சுனிதி குமார் சட்டர்சி எனும்வட நாட்டுப் பார்ப்பான், - சொல்லுகின்றான்; சமற்கிருத உதவி யின்றி இனிதியங்கா தாம், தமிழும்; அதன்மடியில் வளர்ந்துவாம்! -இதைக்கேட்டே இளிக்கின்றார் தெ.பொ.மீயார்! குனிதொழிலை நன்குசெய்த பெருமை சொல்லி, சட்டர்சி கொண்டையத்திற் கேற்றுகிறான், தெ.பொ.மீ.-யை! இனியென்ன? - நடப்பதும் தமிழாட்சி - எனத்தருக்கும் தமிழர்களே! இதற்கென்ன சொல்லுகின்றீர்? சட்டர்சி போன்றவர்க்கும் தெ.பொ.மீ. போன்றவர்க்கும், சாட்டையடி போல் தந்தே, உடன்முன் நின்று, தட்டியடக் கின்றதிறம் படைத்தவர்கள் இங்கிலரா? தன்மானம் உள்ளவர்கள் அற்றாபோனார்? அட்டியிலை; இருக்கின்றார். ஆனாலும், வாய்ப்பிலராய்ஆள்கின்றார் துணையிலராய்! முடங்கிப் போனார்! - - கெட்டதொரு வாய்ப்பிதுதான்! நமைநாமே என்றென்றும் .. கெடுத்துவந்த கதையிதுதான்! கேட்டுக் கொள்வீர்! - 1971