பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

216

கணிச்சாறு இரண்டாம் தொகுதி

வன்மையும் கொண்டராய் வதைபடப் பழமையும் கிளறுவர்! நெஞ்சமும் கொதித்திட நீர்மையும் புகைந்திட நெருக்கடி பற்பல புகுத்துவர்? வெஞ்சமர் பொதுவினை! வீரராய் நிமிர்ந்ததை நிகழ்த்துவீர்! அவை புறந் தள்ளுவீர்!

- #989

கட்சியரசியல் ஒழிகவே!

தெருச்சண்டை போடுகின்ற அரம்பர்களும் வம்பர்களும் சட்டமன்றத் துட்பு குந்தே, கருச்சிதைவைக் கிளறுதில்போல், கழிவறையை அலசுதல்போல் கயமைச்சொல் புழங்கு கின்றார்! உருச்சிதைய ஒருவரைமற் றொருவர் அறத் தாக்கிக்கொண் டாடுகின்றார் ஆட்டம்! ஐயோ! எருச்செறிவாய் இடவேண்டும். மக்கட்கே: இல்லையெனில் மாக்களைத்தாம் பெறுவோம் இங்கே!

மக்களினை ஆளவந்தார் மாக்களென . இழிவாக நடப்பதுவோ, மானம் இன்றி? தக்கபடி கல்வியொடு பண்பாடும் ஒழுக்கமும்மிக் கோங்கியவர் ஆட்சி ஏற, ஒக்கபடி நாம் எண்ணி ஒப்போலை . இட வேண்டும்; அல்லாக்கால் தவிர்க்க வேண்டும்!

செக்கடியில் நாய்படுத்தே என்னபயன்?

சிந்திப்பீர்! கட்சியர சியல்ஒ ழிகவே!

- 1989