பக்கம்:பாவலர் விருந்து.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

v தா ம ைர த் த ட ம் (இயற்கைவனப்பின்கண் ஈடுபட்டுக் கழிபேருவகை பூத்த தாம் அதனைப் பிறர்க்கும் வலியுறுத்துரைப்பான் கருதி 1900-ஆம் வருஷம் பாடியது.)




தா ம ைர த் த ட ம் -




தரவுகோச்சகக் கலிப்பா போன்மயிலுஞ் சொன்மயிலும் போத மகிழ்சிறந்து புன்மையின்றி நாளும் பொருந்தி விளையாடு நன்மையுறு பாண்டிவள காட்டின் றலைநகராம் வன்மைகனி பெற்றவெழின் மாமதுரை யம்பதிக்கண். (க) வையைக் கரையில் வளர்ந்தோங்கி வானுலவு மையைத் தமகிளையான் வன்பிற் றளைப்பவவை கையைப் பிசைந்து கலுழ்ந்துகண்ணீர் காலவிட்டுச் செய்யிற் பயிர்வளர்க்குஞ் சீரார் தடங்காவில். (e.) மன்னுமொரு செக்தா மரைத்தடத்திற் சென்ருட கன்ன ரொருஞான்றை நாளத்திக் காலையினிற் றன்னர் தனியேயான் சார்ந்தேனு வென்பின்ன ரென்னே யறியாம லென்னினிய வில்லாளும். (н.) போந்து மறைந்துகின்ருள் பொய்கைக் கரைசென்று சேர்ந்து கடவுளேயான் சிந்தித் திருப்புழிக்கொம் பார்ந்து பறவையெலா மன்யி னிசைகூட்டி யேய்ந்து பரிதி யெழல்கண்டு கொண்டாடி (+)




க. பொன்மயில் - இலக்குமி. சொன்மயில் - ஸரஸ்வதி. போத - மிக. மகிழ் சிறந்து - களிப்புமிக்கு. புன்மை- விரோதம். சன்மையுறும் - எல்லா நன்மைகளும் பொருந்திய தலைநகரம் - பிரதான நகரம். வன்மை - வலிமை; கண்டு அகழ், மதில், முதலிய காப்பின் வலிமை. சனி - மிகவும். எழில் - அழகு. இது குளகம்.




உ. வையை - வைகை நதி. வான் உலவும்-ஆகாயத்தில் உலாவும். மையை - மேகத்தை, தமகிளையான் - தம்முடைய கிளைகளால்.வன்பு-வலிமை. களைப்ப-தடுக் துச் சிறை செய்ய, கலுழ்ந்து - அழுது. காலவிட்டு - சொரிந்து. கையைப் பிசைந்து கலுழ்ந்து கண்ணிர் காலவிட்டு - என்று கூறியது இலக்கணை. செய் - வயல். சீர் ஆர் . சிறப்புமிக்க. தடங்கா - பெரியசோலை. இதுவுங் குளகம்.




ா. மன்னும் - பொருங்கிய தடம் - தடாகம். சென்று ஆட - சென்று நீராடும் பொருட்டு. கன்னர் - கல்ல. ஒரு ஞான்று - ஒரு தினம். ஞான்றை - ஐ சாரியை. காளந்திக்காலே - வைகறை, விடியற்காலம். (அல்கத்தி - மாலை) தன்னங்கனியே - ஒன்றியாய். சார்ந்தேன - சார்க்கேளுக ; சென்று அடைந்தேனுக. என் பின்னர் - என் பிறகே. இதுவும் குளகம்.




ச. சிந்தித்திருப்புழி - தியானித்திருக்கு ம்பொழுது. கொம்பு. ஆர்ந்து-கொம் புகளிற்றங்கி, ஏய்ந்து - மனம் பொருங் கி. பரிதி - சூரியன். எழல்-உதித்தல். பறவை யெலாங் கொண்டாடி நின்றன.