பக்கம்:பாவலர் விருந்து.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

XIV பண்டி த காட் டம் (ஆசிரியர், தாம் இருமல் நோயால் வருந்திய பொழுது, அவரது தங்தை யாராகிய ரீ கோவிந்த சிவனுர்தங் கட்டளையைச் சிரமேற் கொண்டு திருப்ப சங்குன்றத்தில் ஸ்கலவாசமாக நாற்பத்தைந்து நாள் தங்கியிருந்த காலத்தில், அப்பிணியினை நீக்கியருள ஞானபண்டிதனுகிய கிருப்பாங்கிரி முருகனைப் பாடியது) -




ப ண் டி த நா ட் டம் கட்டளைக்கலித்துறை உலக முவப்ப வுயர்தமி ழாய்தந்த வொண் புலவ கலகம் விளேக்கும் விழியா ரிருவர் கணவவெழி லிலகறி வாள விருமலி னேங்கா தெமக்கருள்வாய் பலகலை யோங்கும் பரங்கிரி மெய்ஞ்ஞான பண்டிதனே! (க) காமர் செம்பாடலி யற்றுபு கின்னேக் கருதிவந்தேக் தேமலர் வெட்சியத் தாருடை யாய்தேவ சேனமகிழ் கோமகனேயெமை வாட்டுங் கொடுநோய் குமைத்தருள்வாய் பாமயி லாடும் பாங்கிரி மெய்ஞ்ஞான பண்டிதனே! (2) தோமில் செம்பாட லியற்றுபு கின்னேத் தொழுதுவந்தே மேகிழ் வுற்றெ மிருமற் கொடுகோயை நீத்தருள்வாய் பூமகள் கொங்கை யெனப்பொலி கின்ற பொருப்புடையாய் பாமக ளேத்தும் பரங்கிரி மெய்ஞ்ஞான பண்டிதனே! (-)




க. உலகம் உவப்ப - சீவான்மாக்கள் மகிழும்படி. கக்சேதேவர் பெற்ற திரு வருளினைத் தாமும் பெறக்கருதியே, ஆசிரியர் திரு முருகாற்றுப்படையின் மங்கல முதன் மொழியை சண்டமைத்துப் போத்தினர். கூடன்மா காத்துக் குலவிய தமிழ்ச்சங்கத்திற் குன்ற மெறிந்த குமரவேளும் அங்கத்தின ையமர்ந்திருந்தமை யின், உயர்தமி ழாய்தக்க வொண்புலவா ? என்றனர். ஆய்தந்த - ஆய்ந்த. கலகம் விளக்கும் விழியார் - கலகம் விளைத்தல் விழிக்கு அடை. இருவர் - வள்ளி, தெய் வயா?ன என்னு மிருசேவியர்.




cf. மங்கையர் கணவ மைந்த ாேறே.” (திருமுரு. 264)




எழில் இலகு அறிவாள - அழகு விளங்கும் அறிவுடையாய். எங்க்ாது - துன்புரு:து. பலகலை- பலநூல்களும். ஒங்கும் - சிறந்து விளங்கும். பண்டிதன் (Doctor),




உ. காமர் - அழகு, விருப்பம் மிக்க எனினுமாம். இயற்றுபு - இயற்றி. செம்பா டல் - செவ்விய பாடல்களே. தேமலர் . தேன் பொருக்திய வெட்சி-வெட்சித் தேம லர் என மாறுக. தார் - மாலை. குமைத்தில் - அழித்தல். பா மயில்- சரஸ்வதி. o




க. தோம் இல் - குற்றமற்ற. தொழுது உவர்தேம் - வணங்கிக் களித்தேம். மகிழ்வுற்றேம் - களிப்பினையுடைய எமது. த்ேதருள்வாய் - நீக்கியருள்வாய் - பூம், கள் கொங்கை - பூமாதேவியின் தனம். பொலிகின்ற - விளங்குகின்ற பொருப்பு : மலை. மலைக்குப் பூமாதேவியின் கொங்கையை ஒப்பிடுவது மரபு. -




of. :சோதிமதி வர்துதவழ் சோலைமலை யோடிாண்டாய்




மேதினியாள் கொங்கைசிகர் வேங்கடமே.: (கிருவேங்கடமாலை)




பா மகள் - சரஸ்வதி.