பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறத்துப்பால் - இல்லறவியல் - அடக்கமுடைமை

105



செல்வப்பேறாம் என்றார். செல்வத் தகைத்து என்பது இன்னோசைபற்றி மெலிந்து நின்றது.

126. ஒருமையு ளாமைபோ லைந்தடக்க லாற்றி
னெழுமையு மேமாப் புடைத்து.

(இ-ரை.) ஆமைபோல் - ஆமையானது. தனக்குத் தீங்கு நேராதவாறு. தன் ஓருடம்பிற்குள் தன் தலையும் நாற்காலுமாகிய ஐந்துறுப்புகளையும் அடக்கிக்கொள்ளுதல் போல; ஒருமையுள் ஐந்து அடக்கல் ஆற்றின் - இல்லறத்தானும் ஒரு பிறப்பில் தன் ஐம்பொறிகளையும் தீவினை நேராதவாறு அடக்க வல்லனாயின்; எழுமையும் ஏமாப்பு உடைத்து -அவ்வல்லமை அவனுக்கு எழு பிறப்பளவும் அரணாதலை யுடையது.

ஒருமை, ஐந்து, எழுமை என்பன தொகைக்குறிப்பு. இவற்றுள் ஒருமை எழுமை என்பன எண்ணாயிருக்கும் நிலைமை குறியாது எண்ணையே குறித்து நின்றன. எழுபிறப்பு என்பதற்கு 62ஆம் குறளுரையில் தந்த விளக்கத்தையே இங்குங் கொள்க.

127. யாகாவா ராயினு நாகாக்க காவாக்காற்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

(இ-ரை.) யா காவாராயினும் நா காக்க - மக்கள் வேறெவற்றைக் காவாவிடினும் நாவையாவது காத்துக் கொள்க; காவாக்கால் சொல்லிழுக்குப் பட்டுச் சோகாப்பர் - அதைக் காவாவிடின் சொற்குற்றப்பட்டுச் சிறைத் தண்டம் அடைவர்.

யா = எவை. இதற்கு யாவும் என்று பொருள் கொண்டு “முற்றும்மை விகாரத்தாற் றொக்கது” என்றார் பரிமேலழகர். 'காவாராயினும்' என்னும் வைத்துக்கொள்வு அல்லது ஒத்துக்கொள்வுக் கிளவியத்திற்கு (Adverb clause of supposition or concession) அப் பொருள் பொருந்தாமை காண்க. சொல்லிழுக்கு என்றது இங்குப் பழிச்சொல்லை. சோ காத்தல் சிறையிற் காத்திருத்தல். அது கனகவிசயர் என்னும் ஆரிய மன்னர் தமிழ் வேந்தரைப் பழித்ததினால், சேரன் செங்குட்டுவனின் சீற்றத்திற் காளாகிச் சிறைப்பட்டது போல்வது.

"அடல்வேல் மன்ன ராருயி ருண்ணும்
கடலந் தானைக் காவல னுரைக்கும்