பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/136

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

114

திருக்குறள்

தமிழ் மரபுரை



(இ-ரை.) இல் இறப்பான்கண் - பிறன் மனைவியின்கண் நெறிகடந்து ஒழுகுபவனிடத்து; பகை, பாவம், அச்சம், பழியென நான்கும் இகவாவாம் - பகையும் கரிசும் அச்சமும் பழியும் ஆகிய நாற்கேடுகளும் ஒருகாலும் நீங்காவாம்.

"அறம்புகழ் கேண்மை பெருமையிந் நான்கும்
       பிறன்றாரம் நச்சுவார்ச் சேரா - பிறன்றாரம்
       நச்சுவார்ச் சேரும் பகைபழி பாவமென்
       றச்சத்தோ டிந்நாற் பொருள்."
                                   (82)

      "புக்க விடத்தச்சம் போதரும் போதச்சம்
       துய்க்கு மிடத்தச்சந் தோன்றாமற் காப்பச்சம்
       எக்காலு மச்சந் தருமா லெவன்கொலோ
       வுட்கான் பிறனில் புகல்."
                                   (83)

   "காணிற் குடிப்பழியாங் கையுறிற் கால்குறையும்
    ஆணின்மை செய்யுங்கா லச்சமாம் - நீணிரயத்
    துன்பம் பயக்குமால் துச்சாரி நீகண்ட
    இன்ப மெனக்கெனைத்தாற் கூறு."
                                   (84)

இவை நாலடியார்.

147.
அறனியலா னில்வாழ்வா னென்பான் பிறனியலாள்
பெண்மை நயவா தவன்.

(இ-ரை.) அறன் இயலான் இல்வாழ்வான் என்பான் - அறவியல்போடு கூடி இல்வாழ்வானென்று சொல்லப்படுபவன்; பிறன் இயலாள் பெண்மை நயவாதவன் - பிறனுக்கு உரிமைபூண்டு அவன்வழி நிற்பவளின் பெண் டன்மையை விரும்பாதவனாவான்.

ஆனுருபு உடனிகழ்ச்சிக்கண் வந்தது. பிறன் மனையை விழையாத வனே உண்மையான இல்லறத்தான் என்றவாறு.

148.
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்
கறனொன்றோ வான்ற வொழுக்கு.

(இ-ரை.) சான்றோர்க்கு - அறிவு நிறைந்தோர்க்கு; பிறன்மனை நோக்காத பேராண்மை அறன் ஒன்றோ - பிறன் மனைவியைக் கருதாத