பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

திருக்குறள்

தமிழ் மரபுரை



122

167. அவ்வித் தழுக்கா றுடையானைச் செய்யவ டவ்வையைக் காட்டி விடும்.

(இரரை.) அழுக்காறு உடையானை - பிறராக்கங் கண்டவிடத்துப் பொறாமை கொள்பவனை; செய்யவள் அவ்வித்துத் தவ்வையைக் காட்டி விடும் - செங்கோலத்தினளாகிய திருமகள் தானும் பொறாது தன் அக்கை யாகிய மூதேவிக்குக் காட்டிவிட்டு நீங்கும். அவ்வை அக்கை. தம் அவ்வை தவ்வை: தம் அக்கை தமக்கை என்பது போல. திருமகளின் அக்கை வறுமைக்குத் தெய்வமாதலின், அவளுக்குக் காட்டுதல் என்பது வறியனாக்குதல். தவ்வையை என்பது இரண்டாம் வேற்றுமையுருபு நாலாம் வேற்றுமைப் பொருளில் வந்த வேற்றுமை மயக்கம். விடும்' என்பது இங்குத் தலைமையாய் வந்த தனிவினை. 168. அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத் தீயுழி யுய்த்து விடும்.

(இ-ரை.) அழுக்காறு என ஒரு பாவி - பொறாமை யென்று சொல்லப் படும் ஒப்பற்ற கரிசன் (பாவி); திருச்செற்றுத் தீயுழி உய்த்து விடும் - தன்னை யுடையவனை இம்மைக்கண் செல்வங் கெடுத்து மறுமைக்கண் நரகத்திற் புகுத்திவிடுவான். பொறாமைக் குணத்தை ஒரு கொடியனாகக் குறித்தது ஆட்படையணி (Personification). தீயுழி என்பது எரிவாய் நரகத்தின் பெயர். விடும் என்பது செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று. கரிசு (பாவம்) - கரிசன் (ஆண்பால்), கரிசி (பெண்பால்). 169. அவ்விய நெஞ்சத்தான் னாக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப் படும். (இ-ரை.) அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் - பொறாமை மனத்தானது செல்வமும்; செவ்வியான் கேடும் - பொறாமை கொள்ளாத செவ்விய மனத்தானது வறுமை அல்லது துன்பமும்: நினைக்கப்படும் - எக்கரணியம் பற்றி நேர்ந்தன வென்று ஆராயப்படும். இரு நிலைமையும் இயற்கைக்கும் அறநூற் கொள்கைக்கும் மாறா யிருப்பதால், அவற்றிற்குக் கரணியம் பழவினையே என்பது ஆராய்ச்சியால் அறியப்படும்.