பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/163

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

அறத்துப்பால் - இல்லறவியல் - ஒப்புரவறிதல்

141



217. மருந்தாகித் தப்பா மரத்தற்றாற் செல்வம் பெருந்தகை யான்கட் படின்.

(இ-ரை.) செல்வம் பெருந்தகையான்கண் படின் செல்வம் ஒப்புரவு செய்யும் பெருந்தகையாளனிடம் சேரின்; மருந்து ஆகித் தப்பா மரத்து அற்று - அது வேர்முதல் கொழுந்துவரை எல்லா வுறுப்பும் பல்வேறு நோய்க்கு மருந்தாகித் தப்பாது பயன்படும் மரத்தையொக்கும்.

மரத்தை மருந்தென்றமையால் அதன் உறுப்புகளெல்லாம் மருந்தாதல் அறியப்படும். சில மருந்துகள் சிலருடம்பிற்கு ஏற்காமையானும் சிறிது காலம் பொறுத்து ஆற்றல் கெடுதலானும், எல்லார்க்கும் என்றும் தப்பாது குணந்தரும் என்பதை யுணர்த்தத் 'தப்பா மரம்' என்றார்.

மேற்கூறிய மூவே றுவமங்களுள் ஊருணியென்பது எல்லார்க்கும் பயன்படும் செல்வத்தையும். பழுமரம் என்பது பலர்க்குப் பயன்படும் செல் வத்தையும், மருந்துமரம் என்பது சிலர்க்குப் பயன்படும் செல்வத்தையும் குறிக்குமென்று கொள்ள இடமுண்டு. இங்ஙனம் பயனளவில் வேறுபடுவது செல்வத்தின் அளவையும் ஒப்புரவாளரின் குறிக்கோளையும் பொறுத்த தாகும். 'ஆல்' அசைநிலை.

218. இடனில் பருவத்து மொப்புரவிற் கொல்கார் கடனறி காட்சி யவர்.

(இ-ரை.) கடன் அறி காட்சியவர் - கடப்பாட்டை யறிந்த அறிவுடையார்: இடன் இல் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார் - தம் செல்வம் சுருங்கிய காலத்தும் ஒப்புரவு செய்தற்குத் தளரார்.

வடார்க்காட்டு மாவட்டத்தைச் சேர்ந்த செண்டத்தூர் ஐயாத்துரை முதலியார் என்னும் வள்ளல், தம் செல்வம் சுருங்கிய காலத்தும் ஓரிலக்கம் உருபா கடன்கொண்டு ஒப்புரவாற்றியது. இதற்கோ ரெடுத்துக்காட்டாம்.

219. நயனுடையா னல்கூர்ந்தா னாதல் செயுநீர செய்யா தமைகலா வாறு.

(இ-ரை.) நயன் உடையான் நல்கூர்ந்தான் ஆதல் - ஒப்புரவாளன வறியவனாதலாவது; செயும் நீர செய்யாது அமைகலா ஆறு - தவிராது செய்யுந்