பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144

திருக்குறள்

தமிழ் மரபுரை




ஈதல் - அவ் விரப்போன் வேண்டிய தொன்றை இல்லையென்னாது அவ னுக்கு ஈதலும்; குலன் உடையான் கண்ணே உள - ஆகிய இரண்டும் உயர் குடிப் பிறந்தான்கண்ணே உள்ளன.

எவ்வம் துன்பம். அது இங்குத் துன்பந்தரும் இழிவுரையைக் குறித்தது.

இனி, இலனென்னு மெவ்வ முரையாமை யீதல்' என்னும் தொடருக் குப் பின்வருமாறும் உரைகள் கூறப் பெறும்;

1. யான் பொருளில்லாதவன் என்று இரப்போன் தன் இளிவரவைச் சொல்லுமுன் அவன் குறிப்பறிந்து கொடுத்தல்.

2. அவ் விழிவுரையைப் பின்னும் இன்னொருவனிடம் சென்று உரையா வண்ணம் அவ் விரப்போனுக்கு நிரம்பக் கொடுத்தல்.

3.இல்லத்தான் என்னிடம் இப்பொழுது பொருளில்லையென்று ஈயாதார் சொல்லும் இழிவுரையைச் சொல்லாது கொடுத்தல்.

இம் மூவுரையும் எளிதாய்ப் பொருந்துவன. இனி, வலிந்து பொருத்தும் வேறு மூவுரையுமுள. அவை வருமாறு: 1.அவ் விரப்போனை ஒன்றுமில்லாதவனென்று பிறர் இழித்துரையா வண்ணம் கொடுத்தல்.

2.அவ் விரப்போனுக்கு மறுத்த இல்லறத்தான் அதுபற்றிப் பின்பு வறியனானபின் தானும்.

3.அவனை யிரந்தோனும் பிறரும் இலனென்னும் இளிவரவு கூறா வண்ணங் கொடுத்தல்.

இவ் வுரைகட்கெல்லாம் 'ஈதல்' என்பது 131ஆம் குறளிலுள்ள 'சொலல்' என்பது போலப் பன்மையாம். இக் குறளால், உயர்குடிப் பிறந்தோன் ஈகையாளனே யன்றிப் பிராமணனல்லன் என்பது பெறப்பட்டது.

224.இன்னா திரக்கப் படுத லிரந்தவ
ரின்முகங் காணு மளவு.

(இ-ரை.) இரந்தவர் இன்முகங் காணும் அளவு ஒரு பொருளை இரந்தவர் அதைப் பெற்றதினால் மலரும் அவரது இனிய முகத்தைக் காணு-