பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறத்துப்பால் - இல்லறவியல் - ஈகை

145




மளவும்: இரக்கப்படுதல் இன்னாது - இரத்தலேயன்றி இரக்கப்படுதலும் குடிப்பிறந்தானுக்குத் துன்பந்தருவதாம்

படுதலும் என்னும் எச்சவும்மையும் அளவும் என்னும் முற்றும்மையுந் தொக்கன. இன்முகங் காணுமளவுந் துன்பமென்றதனால், இரந்த பொருள்களையெல்லாம் ஈதல் வேண்டுமென்பது பெறப்பட்டது. ஆயினும், தன் மானத்திற்கு இழுக்கு நேராவாறு என்னும் வரையறை பகுத்தறிவாற் கொள்ளப்பெறும்.

225. ஆற்றுவா ராற்றல் பசியாற்றல் லப்பசியை
மாற்றுவா ராற்றலிற் பின்.

(இ-ரை.) ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் - தவத்தால் வலிமையடைந்தாரது வலிமையெல்லாம் தம்மை வருத்தும் பசியைப் பொறுத்துக்கொள்ளுதலே; அப் பசியை மாற்றுவார் ஆற்றலின்பின் அவ் வலிமையும் அப் பொறுத்தற்கரிய பசியை ஈகையால் ஒழிப்பவரது வலிமைக்குப் பிற்பட்டதே.

தம் பசியையே மாற்ற மாட்டாதவரது வலிமையினும், தம் பசியையும் பிறர் பசியையும் ஒருங்கே மாற்றுவாரது வலிமை சிறந்த தென்பதாம்.

"யான்வாழு நாளும் பண்ணன் வாழிய
பாணர் காண்கிவன் கடும்பின திடும்பை
யாணர்ப் பழுமரம் புள்ளிமிழ்ந் தன்ன
வூணொலி யரவஞ் தானுங் கேட்கும்
பொய்யா வெழிலி பெய்விட நோக்கி
முட்டை கொண்டு வற்புலஞ் சேருஞ்
சிறுநுண் ணெறும்பின் சில்லொழுக் கேய்ப்பச்
சோறுடைக் கையர் வீறுவீ றியங்கு
மிருங்கிளைச் சிறாஅர்க் காண்டுங் கண்டு
மற்று மற்றும் வினவுதுந் தெற்றெனப்
பசிப்பிணி மருத்துவன் இல்லம்
அணித்தோ சேய்த்தோ கூறுமின் எமக்கே

புறம்.473)

என்று சிறுகுடிகிழான் பண்ணனின் பசியாற்ற லறத்தைச் சோழன் குளமுற் றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் சிறப்பித்துப் பாடி யிருத்தல் காண்க.