பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/194

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

172

திருக்குறள்

தமிழ் மரபுரை



(இ-ரை.) நோற்றலின் ஆற்றல் தலைப்பட்டவர்க்கு - தவத்தால் வரும் ஆற்றலைப் பெற்றவர்க்கு: கூற்றம் குதித்தலும் கைகூடும் - கூற்றுவனை வெல்வதுங் கூடுவதாம்.

கூற்றுவனை வெல்வதாவது சாவினின்று தப்புதல். அது இங்கு ஒருவர்க்குங் கூடாமையின் உம்மை எதிர்மறை. மார்க்கண்டேயன் இன்று மண்ணுலகில் இல்லாமையாலும், வேறுலகிலுள்ளான் என்பது உண்மைக்கும் உத்திக்கும் பொருந்தாமையாலும், அவனைப்பற்றிய கட்டுக்கதையை இங்கு எடுத்துக்காட்டுவது எள்ளளவும் ஏற்காது. வீட்டுலகி லுள்ளானெனின் அது உரையளவையாற் பொருந்தும். ஆயின், அதற்கும். இறைவனே அவனை என்றும் பதினாறாட்டை யுலக வாழ்வினனாக்கினான் என்பது தடையாகும். இறைவன் முன்பு தீர்மானித்த தொன்றைப் பின்பு மாற்றினா னெனின், அது அவன் இறைமையை நீக்கி மாந்தத் தன்மையையே ஊட்டும். 'ஆற்றல்' 'ஒன்னார்த் தெறலும் உவந்தாரை யாக்கலும்' ஆம்.

270. இலர்பல ராகிய காரண நோற்பார் சிலர்பலர் நோலா தவர்.

(இ-ரை.) இலர் பலர் ஆகிய காரணம் - இவ் வுலகத்திற் செல்வர் சிலராகவும் வறியர் பலராகவும் இருத்தற்குக் கரணியம்; நோற்பார் சிலர் நோலாதவர் பலர் - தவஞ் செய்வார் சிலராகவும் அது செய்யாதவர் பலராகவும் இருத்தலே.

"கேடில் விழுச்செல்வங் கல்வி" (400) என்று ஆசிரியரே கூறுவதால், இங்குக் குறிக்கப்பட்ட செல்வ வறுமைகள் கல்வி, பொருள் என்னும் இரு வகைச் செல்வத்திற்கும் பொதுவாம். 'நோற்பார் சிலர்' என்னும் கரணியத்திற்குரிய கருமியம் கூறப்படாமையால் வருவித்துரைக்கப்பட்டது. இம்மை நிலைமையினின்று முன்னை வினைப்பயனுக்குக் கரணியம் உய்த்துணரப்பட்டன.

அதி. 28 - கூடாவொழுக்கம்

அதாவது, துறவறத்தொடும் தவக்கோலத்தொடும் பொருந்தாத தீய வொழுக்கம். அது பெண்ணின்பத்தை மறைவாக நுகர்தலும் அதற்குத்தக ஊட்டம் மிக்க உணவுண்ணுதலுமாம். உள்ளத்தில் உரனில்லாது சுடலை யுணர்ச்சியினாலும் சொற்பொழிவுணர்ச்சியினாலும் திடுமென்று தூண்டப் பட்டுத் துறவுக்கோலம் பூண்டோர், பின்பு அதைக் கடைப்பிடிக்கும் ஆற்ற