பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

196

திருக்குறள்

தமிழ் மரபுரை



கொல்லாவறத்தைக் கடைப்பிடித்தல் கொலையை நீக்குதல். கொலை உடல் சிதைத்துக் கொல்லுதலும் உணவளியாமற் கொல்லுதலும் என இரு வகை. இரண்டும் விளைவளவில் ஒன்றே. உண்ணாத வுயிரி இறக்குமாதலால் வாழ்நாள் முழுதும் உணவளித்துக் காத்தல் வேண்டு மென்பது தோன்ற 'ஓம்புதல்' என்றார். நூலோர் என்று பொதுப்படக் கூறியது இயல் நோக்கி அறநூலோரைக் குறித்தது. உணவளித்துக் காத்தல்போற் சிறந்த நன்மை வேறின்மையின் 'தலை' என்றார்.

323. ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன் பின்சாரப் பொய்யாமை நன்று.

(இ-ரை.) ஒன்றாக நல்லது கொல்லாமை - முதற்படியாக நல்லற மாவது கொல்லாமையே; அதன் பின்சார நன்று பொய்யாமை - அதற்கு அடுத்த படியாக நல்லது வாய்மையாம்.

- கொல்லாமையைப்பற்றிக் கூறவந்த விடத்துப் பொய்யாமையை ஏன் உடன் கூறினாரெனின், முன்பு வாய்மை யதிகாரத்தில் "பொய்யாமை...தரும்", "பொய்யாமை...நன்று”. "யாமெய்யா...பிற" என்று வாய்மையைத் தலை மையாகக் கூறியது இங்குக் கொல்லாமையைத் தலைமையாகக் கூறியதொடு முரணுமாகலின், முற்கூறியதை மட்டுப்படுத்தி இரண்டாந் தலைமையாக வரையறுத்தற்கென்க. அங்ஙனமாயின் வாய்மை யதிகாரத்திற் கூறியது பொய்யாகாதோ வெனின், ஆகாது; அங்குச் சொல்வடிவான அறங்களுள் வாய்மையையும் இங்குச் செயல் வடிவான அறங்களுள் கொல்லாமையையும் தலைமையாகக் கூறி அவ் விரண்டையும் ஒப்பு நோக்கியவிடத்து மண்ணுலகில் மக்கட்குமட்டு முரிய வாய்மையினும் அறுவகை யுயிர்கட்கு முரியதும் உயிரைக் காப்பதுமான கொல்லாமையைச் சிறந்ததாகக் கண்ட மையின் என்க. இனி, கொலையும் செங்கோல் தண்டனையால் நன்மை யாவ தால் வாய்மை என்பது நன்மை செய்யும் பொய்யையுந் தழுவுவதாலும். தீமை செய்யின் பொய்யாக மாறுவதாலும், திரிபுள்ளதென்பது பொருந்தாது.

324. நல்லா றெனப்படுவ தியாதெனின் யாதொன்றுங் கொல்லாமை சூழு நெறி.

(இ-ரை.) நல் ஆறு எனப்படுவது யாது எனின் - பேரின்ப வீடுபேற்றிற்கு நல்ல வழியென்று சொல்லப்படுவது எது என வினவின்; யாது ஒன்றும்