பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

206

திருக்குறள்

தமிழ் மரபுரை



206


வுடம்பை. அந் நுகர்ச்சி முடிந்தவுடன் தம் உறவினரிடம் விட்டுவிட்டு அவருக்குச் சொல்லாமலே நீங்கிவிடுவர் என்பது, உவமை விளக்கமாம். இதில், குடும்பத்திற்கு மரமும், மாந்தன் உயிர்க்குப் பறவையும், அவனுடம்பிற்குக் கூடும் உவமமாம்.

திருவள்ளுவர் பாலுண்ணிகளின் அல்லது மாந்தரின் உயிரும் அதன் உடம்பும் உடன்தோன்றிப் பின்பு உயிர் பிரிவதையே கூறுவதால், உடம்பிற்கு முட்டைக் கூட்டை உவமங்கொள்வதே பொருத்தமாம். ஆயினும், குஞ்சு முட்டைக் கூட்டினின்று வெளிவந்தவுடன் பறவாமையால், 'வெளிவந்து இறக்கை முளைத்தபின்' என்று ஒரு தொடரை இடைச் செருக வேண்டுவ தாயிற்று. எங்கேனும் பொரித்தவுடன் பறந்துபோகும் பறவையினமிருப்பின், அது முழுநிறைவாகப் பொருந்தும் உவமமாம்.

தனித்தொழிய' என்றதனால், முன்பு தனியாமை பெறப்பட்டது. அதாவது, முட்டைக்கூடு முதலில் நொய்ய வுறையாகவும் பின்பு சவ்வாகவும் இறுதியில் தோடாகவும் கருவொடு கூடியிருந்து, குஞ்சு பொரிக்கும்வரை அதற்கு நிலைக்களமாய் நின்றமை. அதனால், அது மாந்தனுயிர் நீங்கும்வரை அதற்கு நிலைக்களமாக உடன்நிற்கும். உடம்பிற்கு உவமமாயிற்று முட்டைத்தோட்டிற்கும் உடம்பிற்கும், கூடு என்பது பொதுப்பெயராயிருப்பதும், உவமைக்குத் துணையாயிற்று. பறவைக்குஞ்சு முட்டையினின்று வெளிவந்தபின் அதற்குள் மீளப் புகாமையால், உடம்பினின்று நீங்கினபின் அதற்குள் மீளப்புகாத உயிருக்கு உவமமாயிற்று. முட்டைப் பிறவிகளுள் மீன், ஊரி(reptile) முதலிய பிறவினங்களுமிருப்பினும், வான்வெளியிற் செல்லும் உயிருக்கு வான்வெளியிற் பறக்கும் பறவையே சிறந்த வுவமமாகக் கொள்ளப்பட்டது. அறிவதும் உருவில்லாததும் நித்தமானதுமான உடம்பும். ஒன்றற்கொன்று நேர்மாறாக வேறுபட்டிருப்பதனாலும், வினைவயத்தால் ஒன்று கூடியதல்லது வேறு தொடர்பொன்று மில்லாதன வாதலாலும், உயிருக்கும் உடம்பிற்கும் இடைப்பட்ட வுறவை நட்பென்றது எதிர்மறைக் குறிப்பாம் (Irony). ஒழிதல் வினை ஒரேயடியாய் நீங்குதலையும், பறத்தல் வினை விரைந்து செல்லுதலையும் குறித்தன. ஏகாரம் தேற்றம்.

339. உறங்குவது போலுஞ் சாக்கா டுறங்கி

விழிப்பது போலும் பிறப்பு.

(இ-ரை.) சாக்காடு உறங்குவது போலும் - ஒருவனுக்குச் சாவு வருதல் உறக்கம் வருதலை யொக்கும்; பிறப்பு உறங்கி விழிப்பது போலும் - அதன் பின் அவன் மீண்டும் பிறத்தல் உறங்கினவன் திரும்ப விழிப்பதை யொக்கும்.