பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறத்துப்பால் - துறவறவியல் - மெய்யுணர்தல்

205


பிறவிக் கேதுவான எண்ணம் இல்லாமைப் பொருட்டு இறைவனையே உன்னுதல் இன்றியமையாததாதலால், இதனை இடைவிடாது பயில வேண்டு மென்பது கருத்து. இதனால் உன்னுகை கூறப்பட்டது.

359. சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் மற்றழித்துச்
பகது சார்தரா சார்தரு நோய்.

(இ-ரை.) சார்பு உணர்ந்து சார்பு கெட ஒழுகின் - வீடுபெற முயல்பவன் எல்லாப் பொருட்குஞ் சார்பான செம்பொருளையுணர்ந்து இருவகைப்பற்றும் நீங்க ஒழுக வல்லனாயின்; சார்தரும் நோய் அழித்து மற்றுச் சார்தரா அவனை முன்பு சாரக்கடவனவாய் நின்ற துன்பங்கள் அவவுணர் வொழுக்கங்களைக் கெடுத்துப்பின்பு சாரமாட்டா.

'சார்பு' தொழிலாகுபெயர். சாரப்படும் பொருளைச் சார்பு என்றார். சார்பு இரண்டனுள், முன்னது வீட்டிற் கேதுவாகிய நற்சார்பும், பின்னது பிறப்பிற் கேதுவாகிய தீச்சார்புமாம். ஒழுக்கம் என்றது. ஓகநெறி யொழுக்கத்தின் எண்ணுறுப்புகளுட் சிறப்பாக ஒருக்கம், நிறை, ஊழ்கம், ஒன்றுகை என்னும் இறுதி நான்கையும் சாரக்கடவனவாய் நின்ற துன்பங்கள், பிறப்புத் தொடக்க மிலியாய் வருதலின் உயிரால் ஈட்டப்பட்ட அளவில்லா வினைகளுள் இறந்த வுடம்புகளாலும் பிறந்தவுடம்பாலும் நுகர்ந்தன போக இனிமேல் நுகருமாறு எஞ்சிநின்றனவாம். அவை ஒளியின் முன் இருள்போல ஓக வொழுக் கத்தினாலும் இறைவன் திருவருளாலும் கெடுதலால், 'மற்றழித்துச் சார்தரா' என்றார். தீவினையொடு கலந்ததினால் நல்வினைப் பயனும் நோயெனப்பட்டது. பிறப்பு அறும்போதே அதனொடு சேர்ந்த பழந்துன்பங்களுங் கெடுதல் இதனாற் கூறப்பட்டது.

360. காமம் வெகுளி மயக்க மிவை மூன்ற
னாமங் கெடக்கெடு நோய்.

(இ-ரை.) காமம் வெகுளி மயக்கம் மூன்றன் நாமம் கெட ஓக வொழுக்கத்தில் முதிர்ந்தவர்க்கு விருப்பு, வெறுப்பு, அறியாமை என்னும் இக்குற்றங்கள் மூன்றும் தம் பெயருங்கூடத் தோன்றாவாறு முற்றக் கெடுதலால்; நோய் கெடும் - அவற்றின் விளைவாகிய வினைப்பயன்களும் அறவே கெடும்.

தொடக்கமிலியாகிய அறியாமையும், அதுபற்றி யான் என மதிக்கும் அகப்பற்றும், அதுபற்றி எனக்கிதுவேண்டு மென்னும் அவாவும், அதுபற்றி