பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

222

திருக்குறள்

தமிழ் மரபுரை


(இ-ரை.) வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டு இல்லை - ஒரு பொருளின்மேலும் ஆசை கொள்ளாமை யொத்த சிறந்த செல்வம் இம்மண்ணுலகத்தில் இல்லை; ஆண்டும் அஃது ஒப்பது இல் - இனி இதனினுஞ் சிறந்ததாகச் சொல்லப்பெறும் விண்ணுலகத்திலும் அதை யொப்பது ஒன்றுமில்லை.

வேண்டாமை வீட்டுலகத்தைத் தருதலின் அதனை விழுச்செல்வ ‘மென்றார். கண்டறிந்த வுலக வுண்மை கேட்டறிந்ததவுலகவுண்மையினுந் தெளிவாதலின் முற்கூறப்பட்டது.


364. தூஉய்மை யென்ப தவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும்.

(இ-ரை.) தூய்மை என்பது அவா இன்மை - ஒருவர்க்குத் தூயநிலை மையாகிய வீடென்று சொல்லப்படுவது அவாவில்லாமையாம்: அது வாய்மை வேண்ட வரும் - அவ் வவா வில்லாமை மெய்யான பரம்பொருளை வேண்டத் தானே வரும்.

அறியாமையும் அவாவும் முதலிய மாசுமறுவற்றதினால் வீட்டைத்தூய்மையென்றும், கருமகத்தைக்கரணகமாக்கித் 'தூய்மையென்பது அவாவின்மை யென்ரரும் என்றுமுள்ள ஒரே மெய்ப்பொருள் பரம்பொரு ளாதலின் அதை வாய்மையென்றும். பரம்பொருளாற் பெறப்படும் சிறந்த பேரின்பத்தை நோக்கின் இழிந்த பிறவித்துன்பத்திற் கேதுவாகிய ஆசை நீங்குமாதலின் 'வாய்மை வேண்டவரும்' என்றுங் கூறினார். 'வாய்மை' ஆகுபெயர். 'மற்று' வினைமாற்றிடைச்சொல். 'தூஉய்மை', 'வாஅய்மை' இரண்டும் இசைநிறை யளபெடை.

365. அற்றவ ரென்பா ரவாவற்றார் மற்றையா
ரற்றாக வற்ற திலர்.

(இ-ரை.) அற்றவர் என்பார் அவா அற்றார் - பிறவி யற்றவரென்று சொல்லப்படுவார் அதற்கேதுவாகிய அவாவற்றவரே யாவர்: மற்றையார் அற்றாக அற்றது இலர் - அவா முற்றும் அறாது சில பொருள்களின்மேல் மட்டும் ஆசையற்றவர் அவற்றால் வருந்துன்பங்க ஊற்றதல்லது பிறவியற்றவராகார்.

இதனால் அவாவறுத்தலின் சிறப்பு உடன்பாட்டு முகத்தாலும் எதிர்மறை முகத்தாலுங் கூறப்பட்டது.