பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறத்துப்பால் - ஊழியல் - ஊழ்

231



380. ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று

சூழினுந் தான்முந் துறும்.

(இ-ரை.) ஊழின் பெருவலி யா உள - ஊழைப்போல மிகுந்த வலிமை யுள்ளவை வேறு எவையிருக்கின்றன? மற்று ஒன்று சூழினும் தான் முந்து உறும் - அதை விலக்குதற்கு வேறொரு வழியை ஆய்ந்து எண்ணினும், அவ் வழியையே தனக்கும் வழியாகக் கொண்டு அது அவ் வெண்ணத்தின் முற்பட்டு வந்து நிற்கும். உறுவலி, மதவலி என்பன போலப் பெருவலி என்பது ஆகுபெயர். சூழினும் என்பது எச்சவும்மை. 'சூழினுந் தான்முந் துறும். என்றமையால் சூழ்ச்சியை நிறைவேற்றுதல் ஒருகாலுங் கூடாதென்பதாம். சூழ்தலாவது நாற்புறமும் வளைந்து முற்றுகையிடுதல் போலப் பகைவர் ஒருவழியாலும் தப்பமுடியாவாறு தீர எண்ணுதல். இங்குப் பகை ஊழ்.

ஊழியல் முற்றிற்று.

அறத்துப்பால் முற்றிற்று.