பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 10.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இக்காலம்

11



"கனியிடை யேறிய சுளையும் - முற்றல்
கழையிடை யேறிய சாறும்
பனிமல ரேறிய தேனும் - காய்ச்சுப்
பாகிடை யேறிய சுவையும்
நனிகற வைபொழி பாலும் - தென்னை
நல்கிய குளிரிள நீரும்
இனியன என்பேன் எனினும் - தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்.

"தமிழ்தமி ழினம்தமி ழிலக்கியம்
இவற்றில் ஒன்றுபோம் எனினும் மற்றவும் ஒழியும்
நாட்டின் உரிமையைக் காத்தல் வேண்டும்.

"தமிழாய்ந்த தமிழன்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சாய்
வருதல் வேண்டும்

தமிழ்ப்பகைவன் முதலமைச்சாய்த் தமிழ்நாட்டில் வாராது
தடுத்தல் வேண்டும்

நமைவளர்ப்பான் நந்தமிழை வளர்ப்பவனாம் தமிழல்லால் நம்முன் னேற்றம்

அமையாது சிறிதுமிதில் ஐயமில்லை ஐயமில்லை
அறிந்து கொண்டோம்."

"சொற்கோவின் நற்போற்றித் திருவகவல் செந்தமிழில்
இருக்கும் போது

கற்கோயில் உட்புறத்தில் கால்வைத்த தெவ்வாறு
சகத்ர நாமம்

தெற்கோதும் தேவாரம் திருவாய்நன் மொழியான
தேனி ருக்கச்
செக்காடும் இரைச்சலென வேதபா ராயணமேன்
திருக்கோ யில்பால்.”

"செந்தமிழ் தன்னில் இல்லாத பல
சீமைக் கருத்துகள் இந்தியில் உண்டோ
எந்த நலம் செய்யும் இந்தி - எமக்
கின்பம் பயப்பது செந்தமி ழன்றோ."

"இன்னலை ஏற்றிட மாட்டோம் - கொல்லும்
இந்தியப் பொதுமொழி இந்தி என்றாலோ
கன்னங் கிழித்திட நேரும் வந்த
கட்டாய இந்தியை வெட்டிப் புதைப்போம்."