பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 10.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

தமிழ் இலக்கிய வரலாறு



பற்றாளர் என்னுங் கருத்தாற் பிராமணராலும், வெளிநாடுகளில் உள்ள அளவுகூடத் தமிழ்நாட்டிற் போற்றப் படாதவரும், பாரத மகாசக்தி காவியம் என்னும் பாவியம் பாடியவரும், சுத்தானந்த பாரதி யென்னும் துய்யவின்பக் கலைமகனார் ஆவர்.

பேரா. ஔவை சு. துரைசாமிப் பிள்ளை

இவர் சித்தாந்த கலாநிதி (கொண்முடிபுக் கலைச்செல்வர்), உரைவேந்தர் என்னும் பட்டங்கள் பெற்ற பேராசிரியப் பெரும் புலவர்; முப்பெருங்காப்பிய ஆராய்ச்சியாளர்; ஐங்குறு நூறு, பதிற்றுப்பத்து, புறநானூறு ஆகிய தொகை நூல்கட்கு விளக்கவுரை கண்டவர்; யசோதர காவியத்திற்கு உரை வகுத்தவர். 'சேரமன்னர் வரலாறு’ இவரது சீரிய வரலாற்றறிவையும் ஆராய்ச்சியையும் புலப் படுத்தும். இற்றைக் கழகநூற் புலமைக்கு இவர் தலைமை தாங்கு பவர் என்னின் மிகையாகாது.

பெரும்புலவர் மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை

இவர் இலக்கண ஆசிரியர் என்று பெயர்பெற்ற சிறந்த இலக்கணப்புலவர்; சித்தர் ஞானக்கோவை, சாத்தனார் கூத்தநூல் முதலிய சிறந்த நூல்களின் பதிப்பாசிரியர்; நன்னூல் இராமானுச கவிராயர் விரிவுரைப் பதிப்பிற்கு மிக வுதவியவர்; இன்று சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகர முதலித் திருத்தப் பதிப்புக் குழுவிற்குத் தலைமை தாங்குபவர்.

ஆராய்ச்சிப் புலவர் மயிலை சீனி. வேங்கடசாமி

தமிழிலக்கிய ஆராய்ச்சியையே தம் வாழ்க்கைப் பணியாகக் கொண்ட மயிலை சீனி. வேங்கடசாமியார் எழுதிய நூல்கள், பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழிலக்கியம், தமிழர் வளர்த்த அழகு கலைகள், இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம், துளுநாட்டு வரலாறு, காவியப் புலவனும் ஓவியக் கலைஞனும், மறைந்து போன தமிழ்நூல்கள், கிறித்தவமும் தமிழும், பௌத்தமும் தமிழும், சமணமும் தமிழும் முதலியன.

இப் பணி தமிழ் வாழ்விற்கும் வளர்ச்சிக்கும் ஏற்ற தலை சிறந்த தமிழ்த் தொண்டாகும்.

திரு. பி. எல். சாமி

மாகி ஆட்சித்தலைவர் உயர்திரு. பி.எல். சாமியார் சங்க லக்கியத்தில் செடிகொடி விளக்கம், சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம், சங்க இலக்கியத்திற் புள்ளின விளக்கம் என்னும் உயிரின