பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 10.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

தமிழ் இலக்கிய வரலாறு



சியினாலேயே ஏற்பட்டன.இன்றேல், உள் நாட்டரசுகள் இதற்கு உடம்பட்டிரா.

நிலப்படை, கலப்படை, வானப்படை என்னும் முத்துறைப் பட்ட மாபெருஞ் சேனை, ஆங்கில அரசால் தில்லியில் தொகுக்கப்பட்டது. 1947-ல் விடுதலையும் அளிக்கப்பட்டது. உள்நாட்டு அரசுகள் ஏற்கெனவே படைக்குறைப்புச் செய்யப்பட்டிருந்ததனால், விடுதலை பெற்ற இந்திய நடுவணரசிற்கு எதிர்ப்பில்லாது போயிற்று. இன்றேல், நைசாம், மைசூர், திருவாங்கூர் ஆகிய மூன்றும் தென்னிந்தியாவையும், காசுமீரம், கெலத்து, இராசத்தானம் ஆகிய மூன்றும் வடஇந்தியா வையும் எளிதாய்க் கைப்பற்றியிருக்கும்.

ஆங்கிலர் இடத்தில் சீனம் அல்லது இரசியா மட்டும் இருந்திருப்பின், இந்தியா ஒருபோதும் விடுதலையடைந் திருக்கவே முடியாது. இந்திய விடுதலையுடன் அந்தமான் நக்கவாரத் தீவுகளும் லக்கத் தீவுகளும் கிடைத்தமை ஆங்கிலர் கூட்டுறவா லேற்பட்ட எதிர்பாராத ஆக்கப்பேறாம்.

உலகந் தோன்றியது முதல் ஆங்கிலராட்சிக் காலம்வரை, பன்னாட்டிந்தியா ஒரு காலும் ஓராட்சிக் குட்பட்டதில்லை. இடையிடை யெழுந்த பேரரசுகளெல்லாம் திறைகொள்ளும் மேலதிகாரம் பெற்றனவேயன்றி, இந்தியா முழுவதையும் தாமாக நேரடியாய் ஆண்டதில்லை.

அரசியலமைப்பு (Constitution)

இந்திய அரசியலமைப்பு அமெரிக்க அரசியலமைப்பைத் தழுவியது. அமெரிக்கரது ஆங்கில அரசியலமைப்பை அடிப் படையாகக் கொண்டது. இந்திய அரசியலமைப்பைத் தொகுக்க உதவியது ஆங்கில அறிவே.

ஆட்சிமுறை

பிறவிக்குல வொழுக்கமுறை (வருணாசிரம தருமம்) நீங்கிய நடுநிலைச் செங்கோலாட்சி ஆங்கிலரது. “பிரிட்டிசு நீதியும் பிரெஞ்சு வீதியும்” என்ற பொதுமக்கள் பழமொழியே, ஆங்கில ராட்சியியல்பைத் தெரிவிக்கப் போதுமானது.

கல்வி

இற்றைக் கல்வியின் பிழிவெல்லாம் அறிவியலும் (Science) கம்மியமும் (Technology). இவற்றை உலகில் தோற்றுவித்தவர் ஆங்கிலர். அவரே இந்தியாவிற்கு வந்து அவர் கல்வியைப் புகட்டியது, றைவன் இந்தியர்க்களித்த சிறப்புப் பேரருளே. முந்நிலைப்-