பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 10.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இக்காலம்

23


3. அல்பிராமணர் கட்சி (Non-Brahmin Party)

ஒவ்வொரு நாட்டிலும் மக்களை அகத்தார் புறத்தார் என இரு பகுப்பாராகப் பகுக்கும் இரட்டைப் பகுப்பிலெல்லாம் அகத்தாரை முன்வைத்தே புறத்தாரை அவரல்லார் என்று குறிப்பது வழக்கம்.

எ-டு: வெள்ளையர் x வெள்ளையரல்லார்;
கிறித்தவர் x கிறித்தவரல்லார்.

இம் முறையில், தமிழ்நாட்டாரைத் தமிழர் x தமிழரல்லார் என்றும், தென்னாட்டாரைத் திரவிடர் X திரவிடரல்லார் என்றுமே பகுத்தல் வேண்டும்; இதற்கு மாறாகப் பிராமணர் x பிராமணரல்லார் என்று பகுத்திருப்பதே பிராமணரின், மீச் செலவையும் மிகை மேம்பாட்டையுங் குறிக்கின்றது. இப் பகுப்பீடு தமிழர் அல்லது திரவிடரதேயாயினும், அதற்கும் பிராமணியமே காரண மென்பதை அறிதல் வேண்டும்.

செல்வத்திலோ கல்வியறிவிலோ உடல்வலிமையிலோ சிறந்தவராயிருந்தாலன்றி, வேற்று நாட்டார் தன்னாட்டாரை அடிப்படுத்தி வாழ்தல் தமிழ்நாடு தவிர வேறெந் நாட்டிலு மில்லை. மூவாயிரம் ஆண்டுகட்கு முன் முதன்முதலாகத் தென்னாடு வந்த ஆரியர், (விரல்விட்டெண்ணுதற்கும் ஏற்காத) அகத்தியர் என்னும் ஒருவரே. அவர் தமிழ் கற்று மேம்பட்டிருந்ததைக் கேட்ட பிற ஆரியப் பூசாரியரும், ஒவ்வொருவராகவோ சிற்சிலராகவோ பின்னர் வந்து, தமிழிலக்கியத்தின் தனிப் பெருஞ் சிறப்பையும் தமிழ நாகரி கத்தின் தலைமையையும் அதே சமையத்தில் தமிழரின் எவரையும் நம்பும் ஏமாளித்தனத்தையுங் கண்டனர். அதன்பின் தமிழெழுத் தினின்று கிரந்த எழுத்தைத் திரித்து, தமிழ்ச்சொற்களாற் போதிய அளவு வளம்படுத்திக் கொண்ட தம் வேத ஆரிய இலக்கிய மொழியில் தமிழிலக்கிய முதனூல்களையெல்லாம் மொழி பெயர்த்துக் கொண்டு, தம் இலக்கிய மொழி தேவமொழியென்றும், அதினின்றே தமிழும் பிற மொழிகளும் திரிந்துள்ளனவென்றும், தாம் தேவர் வழியினரென்றும், தமிழரை ஏமாற்றி, பிறவிக்குலப் பிரிவினை யாலும் உயர்கல்வித் தடையாலும் அவரை அடிமையரும் அறிவிலி களுமாக மாற்றி, மூவாயிரம் ஆண்டாக முன்னேறி விட்டனர். ஆயினும், நாட்டு மக்கள் தொகையில் அவர் நூற்றிற்கு மூவராகவே யிருந்ததனாலும், அவர் ஏமாற்று ஆங்கிலக் கல்வியினாலும் சுந்தரம் பிள்ளை விழிப்பூட்டாலும் மேலையர் ஆராய்ச்சியாலும் வெட்ட வெளிச்சமாய் விட்ட தனாலும், (T.M.) நாயர் நயன்மைக் கட்சியைத் (Justice Party) தோற்றுவித்து, நூற்றிற்கு மூவரான பிராமணர் நூற்றிற்கு 95 அரசியற் பதவிகளைக் கைப்பற்றி, நூற்றிற்குத் தொண்ணூற்