பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 10.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

தமிழ் இலக்கிய வரலாறு


றெழுவரான தமிழ திரவிடரின் முன்னேற்றத்தைத் தடுத்துக் கொண்டிருந்ததைத் தடுத்து, நாட்டை நல்வழிப்படுத்த வழி வகுத்தனர்.

அதனால், ஒவ்வொரு பெருவகுப்பார்க்கும் பயிற்சியிடங்களும் பதவியிடங்களும் பொருத்த விழுக்காட்டிற்கேற்ப ஒதுக்கப் பட்டுள்ளன. மாநகராட்சித் தலைமைப் பதவி எல்லாப் பெருவகுப் பாரிடையும் சுழன்று வருகின்றது. தமிழ்நாட்டிற் பிராமணரில்லாத அமைச்சுக்குழு ஏற்பட வாய்த்துள்ளது.திரவிட நாடுகளில் திரவிடரே முதலமைச்சராகவும் பெரும் பான்மை அமைச்சுப் பதவிகளைப் பெறவும் நேர்ந்துள்ளது. தமிழ்நாட்டிலேனும் பிராமணியம் படிப்படியாய் அடியோ டொழிய அடிகோலப்பட்டுள்ளது.

4. தமிழாரியப் போராட்டம்

தமிழாரியப் போராட்டம், ஆங்கிலர் இந்தியரைப் பிரித்தாளும் சூழ்ச்சியாகப் புகுத்தியதன்று.

“பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்” (குறள். 972)

“அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்குஞ்
செந்தண்மை பூண்டொழுக லான்” (குறள்.30)

என்று திருவள்ளுவரே தமிழாரியப் போராட்டத்தைக் கி.மு. முதலாம் நூற்றாண்டில் தொடங்கிவிட்டார்.

“ஆரிய நன்று தமிழ்தீ தெனவுரைத்த
காரியத்தாற் காலக்கோட் பட்டானைச் - சீரிய
அந்தண் பொதியில் அகத்தியனார் ஆணையினாற்
செந்தமிழே தீர்க்க சுவா”.

என்பது, நக்கீரர் (கி.பி. 2ஆம் நூற்.) ஆரியத்தைப் புகழ்ந்து தமிழை இகழ்ந்த ஒருவனைச் சாவித்த பாட்டு.

தமிழாரியப் போராட்டம் வெளிப்படையாய்த் தோன்றியது கி.மு. முதல் நூற்றாண்டேனும், ஆரியர் வந்ததிலிருந்து அதுவரை அமைந்த முறையில் மறைவாக இருந்தே வந்திருக் கின்றது.

5. தனித்தமிழ் இயக்கம்

1916ஆம் ஆண்டு, ஒருநாள் மாலை, மறைமலையடிகள் தம் பதின்மூன்றகவை மகள் நீலாம்பிகையுடன் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தபோது,