பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 10.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

தமிழ் இலக்கிய வரலாறு


மொழியின் ஒலித்தொகுதியினாலேயே அமைவது. ஒரு மொழி தன் இயல்பிற் கேற்காத ஒலிகளை யேற்பின், நாளடைவில் அது சிதைந்து வேறு மொழியாகிவிடும்.

ஆகவே, தமிழ் என்றும் தனித்தமிழாகவே வழங்குதல் வேண்டும். தூய்மையே அதன் இயற்கை; கலவையே அதன் செயற்கை. மொழிபெயர்க்கக்கூடாத இயற்பெயர்களையும் சிறப்புப் பெயர்களையும் ஒலிபெயர்த்தல் வேண்டும்; பிற அயற்சொற்களை யெல்லாம் மொழிபெயர்த்தல் வேண்டும்.

6.பேராயக் கட்சியால் விளைந்த தீங்கு

ஆங்கிலர் அயல்நாட்டார். அவர் ஆட்சி இங்கு நிலைக்காது. என்றேனும் ஒருநாள் அது நீங்கவே வேண்டும். அதை அவரும் அறிந்தனர். ஆயினும், இந்தியாவை ஓராட்சிக்குட் கொணரவும், இந்தியர்க்குள் ஒற்றுமையுண்டாக்கித் தன்னாட்சிக்குத் தகுதிப் படுத்தவும், ஆங்கிலராட்சி ஒரு காலவரம்புவரை இன்றியமையாததாயிருந்தது.

ஆயின், உயர்நிலைக் கல்வியை எல்லார்க்கும் பொதுவாக்குவதும், அரசியற் பதவிகளை எல்லா வகுப்பார்க்கும் பகிர்ந்து கொடுப்பதும், நாட்டுமக்கள் ஆரிய அடிமைத் தனத்தினின்று விழித் தெழுவதும், பிராமணியம் வரவரக் குன்றுவதும், வரலாற்றாராய்ச் சியும் மொழியாராய்ச்சியும், வளர்ந்தோங்கி வருவதுங்கண்ட பிராமணர், ஆங்கிலராட்சி நீடிப்பின் பிராமணியம் அடியோடு குலைவதுணர்ந்து, ஆங்கிலரை விரைந்து வெளியேற்றும் முயற்சியில் ஆழ்ந்து ஈடுபட்டனர்.

உரிமையுணர்ச்சித் தமிழ திரவிடரோ, ஆங்கிலராட்சி நீங்கின் தம் இனம் மீண்டும் மீளா அடிமைத்தனத்துள் ஆழும் என்று அஞ்சி, அதைத் தடுக்கப் பெரிதும் முயன்றனர்.

பிராமணர் நூற்றிற்கு மூவரேயாயினும், வரலாற்றறிவும் தாய்மொழிப் பற்றும் இனவுணர்ச்சியும் பெருமிதப்பான்மையும் இல்லாத சில தமிழ திரவிடச் சிறுதலைவரைத் துணைக் கொண்டு, எழுதப் படிக்கத் தெரியாத பொதுமக்களுட் பெரும்பாலரை வயப்படுத்தி விட்டதனாற் போராட்டத்தில் வென்றனர். ஆங்கிலர் நீங்கினால், மூவேளைப் பேருண்டியும் ஆறு மாற்றுடையும் கிடைக்குமென்று, பேராயப் பேச்சாளர் அவையோர் வாயூறப் பொதுமேடைகளில் வாய்நேர்ந்ததை (வாக்களித்ததை) ஏழை மக்கள் நம்பியதும், பேராய வெற்றிக்குத் துணை செய்தது.

நயன்மைக் கட்சிக்கும் பேராயக் கட்சிக்கும் இடையே கடும் பகையிருந்ததனாலும், பேராயக் கட்சித் தமிழர்க்குத் தமிழ்ப் பற்றின்மையாலும், தமிழ்நாட்டுப் பள்ளிகளில் இந்தி எளிதாய்க்-