பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 10.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

தமிழ் இலக்கிய வரலாறு


வல்லைத் தமக்கென வாழ்வு நீக்கினார்
ஒல்லும் வகையெலாம் உழைக்க இனவர்க்கே.

மல்லைக் பதவிகொள் மாட்சி யிருப்பினும்
அல்லிற் பகலினில் அடுத்த வழியெலாம்
கல்லிற் சாணியிற் கடுத்த வசவுறுஞ்
சொல்லிற் படும்பொறைச் சூர வாழ்க்கையர்.

மலையெ னும்மறை மலையென் அடிகளும்
தலையென் சோமசுந் தரபா ரதியும்பின்
தொலையும் இந்தியைத் தொடர்ந்தெ திர்க்கினும்
நிலைசி றந்ததி ராம சாமியால்.

குடிசெய் வார்க்கிலை கூறும் பருவமே
மடிசெய் தேயவர் மானங் கொௗக்கெடும்
இடி செய் உடம்புபல் இடும்பைக் கலமெனத்
துடிசெய் தேயவர் தொண்டு பூண்டுளார்.

தான மிட்டதன் தலைவன் நிலைகெட
ஈனச் சூத்திரன் என்னுந் தீயனை
வானங் காட்டென வணங்குந் தமிழன்தன்
மானங் கெட்டுவாழ் வழமை கடிந்துளார்.

படிமை மேல்மிகு பாலை யூற்றலும்
குடுமி மலையெரி கோநெய் கொட்டலும்
கடவுள் தேரினைக் கடத்த லும்முனோர்
கொடைம டம்பகுத் தறிவில்கோ ளென்றார்.

கட்டுக் கதைகளைக் கடவுள் தொன்மத்தைப்
பிட்டுப் பிட்டவை பிதற்றல் புரட்டலை
வெட்ட வெளிச்சமாய் விளக்கி னார்முனம்
பட்டப் படிப்பெலாம் பயனில் குப்பையே.

அடருந் தமிழரோ டணையுந் திரவிடர்
மடமை தவிர்ந்துதன் மான வாழ்வுற
இடர்கொள் ஆர்வலர் இராம சாமியார்
கடவுள் இலையெனக் கழறும் எல்லையே.

8. தமிழர் ஆட்சித்தொடக்கம்

செல்வம் அல்லது அதிகாரம் சிறந்தவிடத்துச் செருக்கு விளைவது இயல்பாதலால், பேராயக் கட்சித் தலைவர் நடுநிலை யின்றி வரம்பு கடந்து ஒழுகலாயினர். அதனால், அறிவும் ஆற்றலு