பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 10.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

தமிழ் இலக்கிய வரலாறு


(2) தொல்காப்பியக் கற்பியல் 5ஆம் நூற்பாவின் முதலீரடிக்கும், நச்சினார்க்கினியர் உரை வருமாறு:

“கரணத்தின் அமைந்து முடிந்தகாலை - ஆதிக்கரணமும் ஐயர் யாத்த கரணமு மென்னும் இருவகைச் சடங்கானும், ஓர் குறை பாடின்றாய் மூன்று இரவின் முயக்கம் இன்றி, ஆன்றோர்க்கு அமைந்த வகையாற் பள்ளி செய்து ஒழுகி, நான்காம் பகலெல்லை முடிந்த காலத்து;

"ஆன்றோராவார், மதியுங் கந்தருவரும் அங்கியும்.” (ப. 576)

“நெஞ்சுதளை அவிழ்ந்த புணர்ச்சிக் கண்ணும் - களவிற் புணர்ச்சி போலுங் கற்பினும் மூன்று நாளுங் கூட்ட மின்மையானும் நிகழ்ந்த மனக்குறை தீரக்கூடிய கூட்டத்தின் கண்ணும்”

“அது நாலாம் நாளை யிரவின் கண்ணதாம்”

"In this connection reference may be made to Hamilton's 'New Account of the East Indies', where it is stated that when the Zamorin marries, he must not cohabit with his bride till the Nambudri, or chief priest, has enjoyed her, and he, if he pleases, may have three nights of her company, because the first fruits of her nuptials must be an holy oblation to the god she worships. And some of the nobles are so complaisant as to allow the clergy the same tribute, but the common people cannot have that compliment paid to them, but are forced to supply the priests' places themselves." (-Castes and Tribes of Southern India, by E. Thurston, Vol. V., p. 326)

இதனால், பிராமணர் நாயர் வகுப்பாரைத் தம்மை நிலத் தேவரென்று நம்பவைத்து, அவர் திருமணஞ் செய்யும்போது, மணமகள் முதல் மூன்றிரவு திங்களும் யாழோரும் (கந்தருவரும்) அழலோனும் (அக்கினியும்) ஆகிய முத்தேவரோடும் புணர வேண்டு மென்றும், அவர் பிராமண வடிவிலேயே வருவராதலால் பிராமணப் பூசாரியரே அந்நுகர்ச்சிக்குரியவரென்றும், அதையும் அருமைப் படுத்துவதற்கு, நாயர் வகுப்பைச் சேர்ந்த குறுநில மன்னரின் அரண்மனைத் திருமணங்களிலேயே அங்ஙனம் நிகழ்தல் கூடுமென்றும், ஏமாற்றி அங்ஙனமே நடப்பித்து வந்தமை புலனாகின்றது.

திரவிடருள் அளவிறந்து ஆரியப்படுத்தப்பட்டவர் கேரளர் என்னும் மலையாளியர். அவருள் தலைமையானவர் நாயர் வகுப் பார். ஒவ்வொரு நாட்டிலும் முதலாவது அரசனை, அரசனில்லா விடத்துத் தலைமையான மக்கள் வகுப்பாரை, அடிமைப்படுத்துவதே ஆரியர் வழக்கம். அவ்வழக்கப்படி நாயர் வகுப்பார் ஆரிய அடிமையரானதினாலேயே, சேரநாட்டுச் செந்தமிழ் தெலுங்கு கன்னடத்தினும் மிகுதியாக வடசொற் கலந்து, கொடுந்தமிழாக மட்டுமன்றி மணிப்பவள மொழியாகவும் மாறிவிட்டது.