பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 10.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இக்காலம்

33


(5) பிறநாட்டார் வேறெவ்வகையிலும் கருத்து வேறுபட்டிருப்பினும், தாய்மொழிபற்றிய செய்தியில் ஒன்றுபட்டிருப்பர். தமிழ் நாட்டிலோ, தமிழைக் காக்க வேண்டிய தலைமைப் பேராசிரியரும் தமிழைக் காட்டிக்கொடுப்பர். அரசும் அவரையே ஊக்கிப் போற்றி உயர்த்தும்.

(6) பிற நாடுகளில் ஆராய்ச்சியாளர் ஏதேனும் ஒரு சிறந்த உண்மை கண்டு கூறின், அதை அனைவரும் ஏற்றுக்கொள்வர். தமிழருட் பெரும்பாலரோ,

“முடிப்ப முடித்துப்பின் பூசுவ பூசி
உடுப்ப வுடுத்துண்ப வுண்ணா - இடித்திடித்துக்
கட்டுரை கூறிற் செவிகொளா கண்விழியா
நெட்டுயிர்ப்போ டுற்ற பிணம். (நீதிநெறி. 31)

“கண்கூடாப் பட்டது கேடெனினிங் கீழ்மக்கட்
குண்டோ வுணர்ச்சிமற் றில்லாகும் - மண்டெரி
தான்வாய் மடுப்பினும் மாசுணங் கண்டுயில்வ
பேரா பெருமூச் செறிந்து” (நீதிநெறி. 34)

என்னும் பாக்கட்கே சிறந்த எடுத்துக்காட்டாவர்.

(7) ஒரு நாட்டில் நிகழ்ந்த செய்தி அந் நாட்டார்க்கே முதலில் தெரிந்திருக்கும். அதன்பின் அதை அவரிடமிருந்து பிற நாட்டாரும் அறிவர். தமிழ்நாட்டிலோ, அவ்வகையில் முற்றும் இயற்கைக்கு மாறாக நேர்ந்துள்ளது.

கடைக்கழகப் பாண்டியர் தலைநகராகிய மதுரையில் நிகழ்ந்த அல்லது நிகழ்ந்தனவாகச் சொல்லப்படும், சிவ பெருமான் 64 திருவிளையாடல்களைக் கூறும் புராணம் ஐந்தனுள், திருவாலவாயு டையார் திருவிளையாடற் புராணம் உத்தரமகா புராணம் என் னும் வடமொழிப் புராணத்தின் ஒரு பகுதியாகிய சாரசமுச்சயம் என்பதிலிருந்தும், கடம்பவன புராணம் நீபாரண்ய மாஹாத்மியம் அல்லது கதம்பவன புராணம் என்னும் வடமொழிப் புராணத் திலிருந்தும், சுந்தரபாண்டியம் அப்பெயருள்ள மொழிப்புராணத்திலிருந்தும், பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணம் ஸ்ரீஹாலாஸ்ய மாகாத்மியம் என்னும் வட மொழிப் புராணத்திலிருந்தும், அட்டமிப்பிரதக்ஷிண மான்மியம் (அப் பெயருள்ள) ஒரு வடமொழிப் புராணத்திலிருந்தும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

இனி, சேக்கிழார் பெருமான் நம்பியாண்டார் நம்பியின் திருத்தொண்டர் திருவந்தாதியைத் திருத்தொண்டர் புராணம் என்னும்