பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 10.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

தமிழ் இலக்கிய வரலாறு


பெரியபுராணமாகப் பெருக்கிப் பாடியிருக்கவும், அது உபமந்யு பக்தவிலாசம் என்னும் வடமொழிப் புராணத்தின் வழிப்பட்டதாக ஒருசாரார் துணிந்து கூறுவர்.

பகுத்தறிவுள்ளவர் இவற்றின் உண்மையைக் கண்டு கொள்க.

(8) இரணியாட்சன் ஒருமுறை ஞாலத்தைப் (பூமியைப்) பாயாகச் சுருட்டிக்கொண்டு கடலில் ஒளிக்க, திருமால் பன்றியுருக் கொண்டு தன் கொம்பினால் அவன் மார்பைப் பிளந்து ஞாலத்தைப் பண்டுபோல் நிறுத்தினார் என்றும், அன்று நிலமகட்கும் அவருக் கும் நேர்ந்த தொடர்பினால் நரகாசுரன் பிறந்தானென்றும், கூறிக் கல்லா மக்களை விலங்காக்கும் கட்டுக்கதைகளின் இழிவையும் டக்கரையும் பொய்ம்மையையும் புரட்டையும் படவாயிலாகப் பெரியார் விளக்கிக் காட்டியபோது, அறிவியலும் ஞாலநூலும் உயிர்நூலும் உடல்நூலும் வரலாற்று நூலும் கற்ற இக்காலத்தில் அவருடன் ஒத்துழையாது, ஆரியருடன் சேர்ந்து கண்டித்தது, அவர் கூறியவாறு காட்டு விலங்காண்டித்தனமே யன்றி வேறன்று.

“மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க் குடம்பும் மிகை” (குறள்.345)


என்று, திருவள்ளுவர் துறவு என்னும் அதிகாரத்தில் துறவியர்க்குக் கூறியிருக்கவும், அறுபான் விழாக் கொண்டாடும் சில ஆரியப் போலித் துறவியர் பொன்னை வேண்டும்போது, சில தமிழச் செல்வரும் சிறிதும் பகுத்தறிவின்றி அவருக்குக் காசு மாலையும் கட்டிப் பொன்னும் பொற்காசுங் கொடுத்துக் கும்பிட்டு வருகின்றனர்.

அறுபான் விழா இல்லறத்தார்க்கே யுரிய தென்பதை, அறுபதாங் கலியாணம் என்னும் அதன் பெயரே தெரிவிக்கும்.

(10) அரசியல் அதிகாரியாயிருந்த ஒரு தமிழர், ஓய்வு பெற்ற பின்பு ம், “தமிழ் நீச பாஷை” என்று ஒரு பிராமணத் துறவியார் தம்மிடம் சொன்னதைப் பொதுமேடையிற் கண்டிக்க அஞ்சுகின் றார். இவர் போன்றோரே ஏனையர் பலரும்.

(11) நாடு தமிழ்நாடு; மதம் தமிழர் மதம்; கோயில்கள் தமிழ அல்லது திரவிட அரசர் கட்டியவை; தெய்வம் தமிழர் தொன்று தொட்டு வழிபட்டுவருந் தெய்வம்; தெய்வப் படிமைகள் தமிழக் கம்மியர் உருவாக்கியவை. அங்ஙனமிருந்தும், திருக்கோவிற் கட்டட நூல் ஒன்றேனுந் தமிழில் இல்லை.

மருதநிலத்தில், நாகரிகந் தோன்றிய முதற்காலத்தில், அறிவும் ஆற்றலுமிக்க ஒரு செங்கோல் அரசனே தெய்வமாக வணங்கப்