பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 10.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

தமிழ் இலக்கிய வரலாறு


காசியபம், மயமதம், மானசாரம், சிற்பரத்தினம் முதலிய சிற்ப நூல்களும், சுக்கிரநீதி, பிருகத்சங்கிதை முதலிய பிறநூல்களுமாக இருப்பது, ஆரிய அடிமையர்க்கு ஒருகால் மகிழ்ச்சியை வூட்டினும் வரலாற்றாராய்ச்சியாளர்க்கும் மொழியாராய்ச்சி யாளர்க்கும் தமிழிரின் விழிப்பின்மை பற்றி அளவிறந்த மன வருத்தத்தையே உண்டு பண்ணுகின்றது.

(12) தமிழ் இனமோ, மொழியோ, நாடோ பற்றி எவரேனும் ஒருவர் வாழ்நாள் முழுவதும் வருந்தி அரும்பெருந் தொண்டு செய்யினும், அவர் இருக்கும்போது அரசும் பொதுமக்களும் ஊக்காதும் உதவாதும் போற்றாதும் புகழாதும், அவர் மறைந்த பின், பல்லாயிரக்கணக்காகச் செலவிட்டுப் பாராட்டெடுப்பதும் பரிசு வழங்குவதும் பட்டிமன்றம் நிகழ்த்துவதும் படிமை நிறுவுவதும், இற்றைத் தமிழர் வழக்கமாக இருந்துவருகின்றது.

மறைமலையடிகட்கு, இறுதிக்காலத்திற் சிற்றளவான பொத்தக விற்பனை தவிர வேறொரு வருவாயும் இருந்ததில்லை.

வருமானவரி அதிகாரிகள் வரம்பிறந்த தொல்லை கொடுத்த தன்றி, கோவைக் கோ. துரைச்சாமி நாயக்கரின் (G.D.நாயுடு வின்) புதுப்புனைவுகட்கு ஒருவகை ஊக்குவிப்பும் இன்மையால், அவர் வயிறெரிந்து மாண்டார்.

பாரதிதாசன் இறுதி மருத்துவப் படுக்கையிலிருந்தபோது, ஐம்பதுருவாவிற்கு விடுத்த வேண்டுகோள் விரைந்து நிறைவேற வில்லை.

10. தமிழுக்கு ஆகாத நூல்கள்

(1) ஆரியப் புராணங்கள்

மாபுராணம் பூதபுராணம் என்னும் இறந்துபட்ட தமிழ் இலக்கண நூல்களும், திருமுறைகண்ட புராணம், சேக்கிழார் புராணம், பெரிய புராணம் முதலிய சில தமிழ்ப் புராணங்களும் தவிர, பதினெண் புராணமும் துணைப்புராணமும் ஊர்ப் புராண மும் ஆகிய ஆரியப் புராணங்கள் அனையவும், தமிழையுந் தமிழனையுந் தாழ்த்திச் சமற்கிருதத்தையும் பிராமணனையும் உயர்த்துவதால், தமிழுக்கு ஆகாதனவே.

(2) வரணப் பாகுபாட்டு நாடக நூல்கள்

நாடகக் கதைத் தலைவர்பற்றி, நாற்பொருளிலும் தொண் (ஒன்பான்) சுவையிலும் நால்வரணத்தைப் புகுத்தும் ஆரிய நாடக நூல்கள் தமிழுக்காகா.