பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 10.pdf/51

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

இக்காலம்

37



வரணம் பொருள் சுவை
பிராமணன் நாற்பொருளும் தொண்சுவையும்
அரசன் அறம்பொருளின்பம் இளிவரலும்
(க்ஷத்திரியன்) சமநிலையும் அல்லாதவை
வணிகன் அறமும்பொருளும் சமநிலை யொழிந்த எட்டும்
சூத்திரன் அறம் மட்டும் பெருமிதமும்
(வேளாளன்) சமநிலையும் அல்லாதவை

மூவேந்தரும் ஆரிய அடிமையரானபின், பிராமணர் ஒல்லும் வகையாற் செல்லுமிடமெல்லாம் நால்வரணப் பாகுபாட்டைப் புகுத்திவிட்டனர். பாம்பு, பறவை, வண்டு முதலிய அஃறிணை யுயிரினங்களுள்ளும், வீடுகட்டும் மரம், மனைநிலம், வீடு, குடியிருப்பு (ஊர்) முதலிய உயிரற்ற பொருள்களுள்ளும், இடங்களுள்ளும் அப்பாகுபாடு புகுந்துவிட்டது. அதை மக்கள் மறவாத படி, நகர மதிலரணிலும் நாடக மேடையிலும் நால்வரணப் பூதவடி வங்களை வண்ணப் பூச்சாக வரைந்து வைத்தனர்.

“தோற்றிய வரங்கிற் றொழுதன ரேத்தப்
பூதரை யெழுதி மேனிலை வைத்து” (சிலப். 3:106-7)

எறு சிலப்பதிகாரங் கூறுதலையும், அதற்கு அடியார்க்கு நல்லார், “அந்தணர் அரசர் வணிகர் சூத்திரர் என்று சொல்லப்பட்ட நால்வகை வருணப் பூதரையும் எழுதி மேனிலத்தே யாவரும் புகழ்ந்து வணங்க வைத்தென்க.

என்னை?

“கூறிய வுறுப்பிற் குறியொடு புணர்ந்தாங்
காடுநர்க் கியற்று மரங்கி னெற்றிமிசை
வழுவில் பூத நான்கு முறைப்பட
எழுதின ரியற்ற லியல்புணர்ந் தோரே. (சீவக. 672 நச். மேற்.)

என்றா ராகலின்.

“இப் பூத நான்கின் உண்டியும் அணியும் ஆடையும் மாலையும் சாந்தமும் பொழுதும் செயலுமுதலிய வெல்லாம் அழற்படு காதைக் கண்ணே விரித்துக் கூறுதும்” என்று உரைத் ததையும் காண்க.

நால்வகை வரணப் பூதங்கட்கும், வச்சிரதேகன், வச்சிர தந்தன், ருணன், இரத்தகேசுவரன் என்று பெயரும் இட்டிருக்கின்றனர். இவற்றின் நிறம், முறையே வெண்மை, செம்மை, பொன்மை, கருமை.