பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 10.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

தமிழ் இலக்கிய வரலாறு


ஆரியர்க்கு முந்தின தமிழ் நாடகங்களிலும் நாடகவரங்குகளிலும், இத்தகைய குறிப்பே இருந்திருக்க முடியாது.

நாடகங்கள் நாள்தொறும் நிகழா வாதலாலும், அவற்றைக் காண்பவர் சிலரேயாதலாலும், எந்நாளும் எந்நேரமும் எல்லாரும் காண்பதற்கே, நகர்ப்புற மதிலின் நாற்புரத்திலும் நால்வரணப் பூதங்களை எழுதியிருந்திருக்கின்றனர்.

மேலையர் நாடகத்தைத் தனிக்கூத்து (Drama), இசைக்கூத்து (Opera) என்று இருவகைப்படுத்துவர். சேக்கசுப்பீயர் எழுதினவெல் லாம் தனிக் கூத்தே. பிராமணரும் மேலையினத்தவராதலின், பல தனிக்கூத்து நாடகம் எழுதி வைத்துள்ளனர். சமற்கிருதம் பிராமண இலக்கிய மொழியாதலின், காளிதாசன் முதலிய வடமொழிப் புலவரும் அம் முறையைப் பின் பற்றியுள்ளனர்.

தமிழர் நாடகம் தொன்றுதொட்டு இசைக்கூத்தே. சுந்தரம் பிள்ளை மனோன்மணீய நாடகம் ஆரிய முறையைப் பின் பற்றியதே. அது தமிழர் அரங்கில் நடித்தற்குரிய தன்று. திரைப்படக் கதை போன்று உரைநடையும் இசைப்பாட்டுங் கலந்ததே தமிழ்நாடகம், இராசராசன் காலத்து இராசரா சேசுவர நாடகம் அத்தகையது. இவ்வுண்மையை அறியாதவர் தமிழில் நாடக விலக்கியம் இல்லையென வருந்துவர். தமிழ் நாடகம் காலத்திற் கேற்றவாறு புதிது புதிதாகத் தோன்றக் கூடியது. நிலையான இலக்கியமாயின், அது நடித்தற்குரிய தல்லாத சிலப்பதிகாரம் போன்றதே.

(3) ஆரியந் தழுவின இலக்கண நூல்கள்

வீரசோழியம்

“ஆயுங் குணத்தவ லோகிதன் பக்க லகத்தியன்கேட்
டேயும் புவனிக் கியம்மிய தண்டமி ழீங்குரைக்க”

என்றும்,

"பூமே லுரைப்பன் வடநூன் மரபும் புகன்றுகொண்டே”

என்றும், பாயிரத்திலேயே புத்தமித்திரன் புத்தமதப் பித்தாற் புரை படுகின்றார். அகத்தியன் தமிழ் கற்ற ஆரியருள் முதல்வன். அவன் காலத்திற் புத்தமதமே தோன்றவில்லை; புத்தரும் பிறக்கவில்லை; அவலோகிதன் என்றொருவன் வந்ததுமில்லை.

"சொன்ன மொழிப்பொரு ணீக்கு நகாரமச் சொன்முன் மெய்யேல் அந்நிலை யாக வுடல்கெடு மாவிமுன் னாகிலது
தன்னிலை மாற்றிடும்..........”






















99

(சந்தி. 11)