பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 10.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இக்காலம்

39



"ஐம்மூன்ற தாமுடல் வன்மைபின் வந்திடி லாறொடைந்தாம்"
                                            (சந்தி. 18)

என்னும் புணர்ச்சிக் கூற்றுகள் தவறாம். அல் என்னும் தென் சொல்லே அன்-அ என்று திரிந்து குறுகும். அன்(அந்) என்பது வடமொழியில் முன்பின்னாக மாறி ந(ன) என்றாகும்.

ழகரமெய் புணர்ச்சியில் திரிவதில்லை. டகர ணகரத் திரி பெல்லாம் மரூஉப் புணர்ச்சியே.

வேற்றுமைப்படலம் 2ஆம் நூற்பாவில், சு(ஒருமையீறு), அர், ஆர், அர்கள், ஆர்கள், கள், மார் என்னும் ஏழும் முதல் வேற்றுமை யுருபுகள் என்று கூறியிருப்பது, பல்வேறு வகையிற் பெரும்பிழை யாகும். தமிழ் எழுவாய்க்கு உருபே யில்லை. அது வேற்றுமை யெனப்படுவது பெரும்பான்மை பற்றியும், வேற்றுமைகளினின்று வேற்றுமைப்படுவது பற்றியுமே. அன், ஆன், அள், ஆள், இ என்பன ஒருமையும், அர், ஆர் முதலியன பன்மையும்பற்றிவந்து பாலும் எண்ணும் ஒருங்கே யுணர்த்தும் ஈறுகள். எழுவாய் இயல்பாகவும் ஈறுபெற்றும் இருவகையில் நிற்கும். ஒருமையீறுகளைச் சுவ்வில் அடக்க முடியாது. சுப்பிரத்தியயம் என்பது ஆரிய இலக்கண வழக்கு அது தமிழுக்குச் சற்றும் பொருந்தாது. ஒன்றை ஒரு வேற்றுமை யுருபென்றால், அவ் வேற்றுமைப் பொருளிலேயே அதை எல்லாப் பெயர்களும் ஏற்றல்வேண்டும். மேற்கூறிய பாலெண்ணீறுகள் அத்தகையன வல்ல.

இங்ஙனம் படலந்தொறும், தமிழுக்கு மாறான செய்திகளைக் கூறிச்செல்கின்றார் வீரசோழிய ஆசிரியர். படல அமைப்பும் சந்திப் படலம் என்று தொடங்குவதும், தமிழ் மரபிற் கேற்றவையல்ல. இறுதியில், மணிப்பவள நடையை வழா நிலைப் படுத்தியிருப்பதும் தமிழுக்கு முற்றும் முரணாகும்.

பாட்டியல்கள்

பிராமணியம் வேரூன்றிய பிற்கால இலக்கியத்தில், மக்கள் மேற்பாடும் பாட்டிலும் பனுவல்களிலும், முதற்சீ ரெழுத்துக்கள், பாடப்படும் பாவகை, பாடும் பனுவலின் பாத்தொகை முதலியன பற்றி நால்வரணப் பாகுபாடாக வெவ்வேறு வரம்புகளிடப் பட்டுள்ளன. அவற்றையெல்லாங் கூறும் நூல் பாட்டியல் எனப்படும். கடைக்கழகக் காலத்திலிருந்து, பதின்கணக்கான பல்வேறு இயற்றப்பட்டுள்ளன. அவற்றுள் தலைமையாகக் கருதப்படுவது பன்னிருபாட்டியல். அதன் கூற்றுகள் வருமாறு: