பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 10.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

தமிழ் இலக்கிய வரலாறு


முதற் சீரெழுத்துகள்

"நறுமலர்த் திசைமுகன் ஈசன் நாரணன்
அறுமுகன் படைத்தன அந்தணர் சாதி.” (5)

"அவை பன்னீருயிரும் கங, சஞ, டணவும்
இந்திரன் வெங்கதிர் சந்திரன் படைத்தன
துன்னருஞ் சிறப்பின் மனைவர் சாதி." (6)

அவை தந், பம, யர.

"திருமிகு நிதிக்கோன் வருணன் படைத்தன
அணிமிகு சிறப்பின் வணிகர் சாதி" (7)

அவை லவ, றன.

“கூற்றுவன் படைத்தன கூற்றன இரண்டும்
ஏத்திய மரபிற் சூத்திர சாதி.” (8)

அவை ழள.

பாவகை

“அந்தணர் சாதி யாகிய வெள்ளை” (91)

“காவலர் சாதி யாகிய அகவல்” (92)

“நெடுநிலைக் கலியே வணிகர் சாதி” (93)

“எஞ்சிய வேளாண் சாதி வஞ்சி” (94)

கலம்பகச் செய்யுள் தொகை

“தேவர்க்கும் முனிவர்க்கும் காவல் அரசர்க்கும்
நூறு தொண்ணூற் றைந்துதொண் ணூறே.
ஒப்பில் எழுப தமைச்சிய லோர்க்குச்
செப்பிய வணிகர்க் கைம்பது முப்பது
வேளா ளர்க்கென விளம்பினர் செய்யுள்.” (130)

பன்னிருபாட்டியற்கு முந்தியவை

பொய்கையார், பரணர், இந்திரகாளியார், அவிநயனார், அகத்தியர், கல்லாடனார், கபிலர், சேந்தம்பூதனார், கோவூர் கிழார், மாபூதனார், சீத்தலையார், பல்காயனார், பெருங்குன்றூர் கிழார், தொல்காப்பியர், மாமூலர் முதலியோர் பாட்டியல்கள்.

அகத்தியர் என்றது பிற்காலக் கடைக்கழக அகத்தியர் ஒருவரை முதற்கால அகத்தியர் இடைக்கழகத்திற்குப் பிற்பட்டுத்