பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 10.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

தமிழ் இலக்கிய வரலாறு


உவமை-. உபமா.-ப, மை-மா.ஒ.நோ: உவண்- உவணம்- சுவணம்-. ஸுபர்ண, படி-படிமை-. ப்ரதிமா.

வடமொழியாளர், உப என்பது உடன் (கூட) என்று பொருள்படும் உபஸர்க்கம் (prefix) என்றும், 'மா' என்பது அளவு குறித்த சொல் என்றும், பொருந்தப் பொய்ப்பர்.

உப என்னும் முன்னொட்டிற்கும் 'உ' என்பதே வேர். உத்தல் = பொருந்துதல். உத்தி = பொருத்தம், பொருந்தும் நூன் முறை, மதிமை. உத்திகட்டுதல் = விளையாட்டிற் கன்னை பிரிக்க இருவர் இணைந்து வரல்.

அளவுகுறித்த மா என்னுஞ் சொல்லுந் தென்சொல்லே. மா =ஓர் அளவு (1/20). மா + அனம் = மானம் (அளவு). மா + திரம் = மாத்திரம் (அளவு).

உருத்தல் = தோன்றுதல். உரு தோற்றம், வடிவு, வடிவுடைப் பொருள். உருப்படி = தனி யெண்ணிக்கைப் பொருள். உரு-உருவு- உருவம் தோற்றம், வடிவம். உருவு-உருபு = வேற்றுமை வடிவான சொல் அல்லது அசை. ஒ.நோ : அளவு-அளபு. உருவாக்குதல்= தோற்றுவித்தல், உண்டாக்குதல் உருவம்-உருவகம் = ஒரு பொருளை இன்னொன்றாகக் கூறுதல்.

உருவம் - .ரூப. உருவகம் - .ரூபக.

காண் - OE. con. kon - know (க்னோ) - L. gna - Skt. ஜ்ஞா - ஜ்ஞாபி ஜ்ஞாபக த. ஞாபகம்.

கரம், காரம் என்னும் எழுத்துச்சாரியைகள் தமிழினின்று வடமொழிச் சென்றவையே. மேலையாரிய மொழிகளில் இத்தகைய சாரியை ஒன்றுமில்லை.

இங்ஙனமே பிற பலவும்.
அன்றியும் வடநூற் களவிலை யவற்றுள்
ஒன்றே னுந்தனி வடமொழி யுண்டோ

என்றே இன்று வினாவற்குரியதாம். சமற்கிருதத்திலுள்ள சுட்டுச் சொற்கள் அனையவும், தமிழ் முச்சுட்டெழுத்துகளினின்று திரிந்தவையே. மேலும், வடமொழியடிப்படைச் சொற்களெல்லாம் பெரும்பாலுந் தென்சொற்களினின்றே திரிந்துள்ளன.

இனி, தமிழ் யாப்பின் சிறப்பையும் பொருளிலக்கணத்தின் தனிச்சிறப்பையும் கண்ட பின்பும், இருமொழியிலும் இலக்கணம் ஒன்றே யென்றது, மதிமாற்றத்தின் பாற்பட்டதே.